மழையை நம்பி 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம்

விருதுநகர் : -விருதுநகரில் மழையை நம்பி மானாவாரி சாகுபடியாக 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குறைந்த நீராதாரங்கள், கண்களுக்கு எட்டிய துாரம் வரை தரிசுக் காடுகள், மரங்கள் இல்லாத சாலைகள் என மழையின்றி ஆண்டு முழுவதும் வறட்சியே நிலவுகிறது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடக்கிறது. அதில் 80 ஆயிரம் ஏக்கர் மானாவாரி சாகுபடி தான். தென்மேற்கு பருவ மழையை காட்டிலும் வடகிழக்கு பருவ மழை மட்டுமே மானாவாரி விவசாயிகளுக்கு கை கொடுக்கிறது.இந்தாண்டு ஆவணி துவக்கத்தில் எரிச்சநத்தம், சாத்துார், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, மல்லாங்கிணர் உள்ளிட்ட பகுதிகளில் மழையை நம்பி 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளனர். ஜூனில் துவங்கிய தென் மேற்கு பருவமழை முடியும் தருவாயில் இருந்தாலும் நவம்பரில் துவங்க உள்ள வடகிழக்கு பருவமழையை நம்பி…

Read More

மாவட்டத்தில் நகரும் ரேஷன் கடைகள்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 60 நகரும் ரேஷன் கடைகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதன் மூலம் 8 ஆயிரம் கார்டுதாரர்கள் பயன்பெறுவர்.மக்கள் எளிதில் அணுக இயலாத, பகுதி நேர கடைகள் திறக்க வாய்ப்பில்லாத பகுதிகளில் நகரும் ரேஷன் கடைகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 110 பகுதிகள் பரிந்துரைக்கப் பட்டது. இதில் முதற்கட்டமாக 60 பகுதிகள் மட்டும் நகரும் ரேஷன் கடைகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.அதன்படி ஸ்ரீவில்லிபுத்துாரில் 12, சாத்துாரில் 11, திருச்சுழியில் 14, அருப்புக்கோட்டையில் 16, விருதுநகரில் 4, ராஜபாளையத்தில் 2, சிவகாசியில் 1 என 60 கடைகள் விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறது. இதற்காக கலெக்டர் கண்ணன் தலைமையில் வழித்தடங்கள், விநியோகிக்கும் நேரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Read More

ஹெலிகாப்டரில் வந்து அ.தி.மு.க., நிர்வாகி யாகம்

ஸ்ரீவில்லிபுத்துார்:தமிழகத்தில், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது.அ.தி.மு.க., இளைஞர் பாசறை மாநில துணை செயலர், கோவை விஷ்ணுபிரபு, நேற்று காலை, 10:45 மணிக்கு மனைவி, மகன் உட்பட ஐந்து பேருடன், தனி ஹெலிகாப்டரில் ஸ்ரீவில்லிபுத்துார், சி.எம்.எஸ்., பள்ளி மைதானத்தில் வந்து இறங்கினார். அங்கிருந்து, காரில் ஆண்டாள் கோவில் சென்று தரிசனம் செய்தனர். சக்கரத்தாழ்வார் சன்னிதியில், ஜெயலலிதா படத்துடன், ரகுபட்டர் தலைமையில் நடந்த சுதர்சன யாகத்தில் பங்கேற்றனர். யாகத்தில், உள்ளூர் கட்சி பிரமுகர்கள் யாரும் பங்கேற்கவில்லை.விஷ்ணுபிரபு கூறுகையில், ”சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெறவும், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சி தொடரவும், கொரோனா ஒழிந்து, மக்கள் சுபிட்சமுடன் வாழவும் பிரார்த்தனை செய்தோம்,” என்றார்.

Read More

பணிநியமனம் வழங்காததால் உடற்கல்வி ஆசிரியர்கள் பாதிப்பு

சிவகாசி : ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 3 ஆண்டு களுக்கு முன்பு நடந்த போட்டி தேர்வில் வெற்றி பெற்றும் பணிநியமனம் வழங்காததால் உடற்கல்வி ஆசிரியர்கள் பாதிக்கின்றனர். பள்ளிக்கல்வி துறை மற்றும் இதர துறைகளில் 663 கலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017 செப்.ல் தேர்வு நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு 2018 ஆக.ல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. 2019 நவம்பரில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஆனால் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டும் வழங்கவில்லை. இவர்களுக்கு 6 வாரங்களில் பணி வழங்க 2020 ஜனவரியில் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஆனாலும் நடவடிக்கை இல்லை.தேர்வில் வெற்றி பெற்ற சிவகாசி தங்கேஸ்வரன்: 3 ஆண்டுகளாகியும் பணிநியமன ஆணை வழங்காததால் பொருளாதாரம், மனரீதியாக பாதிக்கிறோம்,என்றார்.

Read More