பணிநியமனம் வழங்காததால் உடற்கல்வி ஆசிரியர்கள் பாதிப்பு

சிவகாசி : ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 3 ஆண்டு களுக்கு முன்பு நடந்த போட்டி தேர்வில் வெற்றி பெற்றும் பணிநியமனம் வழங்காததால் உடற்கல்வி ஆசிரியர்கள் பாதிக்கின்றனர்.

பள்ளிக்கல்வி துறை மற்றும் இதர துறைகளில் 663 கலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017 செப்.ல் தேர்வு நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு 2018 ஆக.ல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. 2019 நவம்பரில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஆனால் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டும் வழங்கவில்லை. இவர்களுக்கு 6 வாரங்களில் பணி வழங்க 2020 ஜனவரியில் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஆனாலும் நடவடிக்கை இல்லை.தேர்வில் வெற்றி பெற்ற சிவகாசி தங்கேஸ்வரன்: 3 ஆண்டுகளாகியும் பணிநியமன ஆணை வழங்காததால் பொருளாதாரம், மனரீதியாக பாதிக்கிறோம்,என்றார்.

Related posts

Leave a Comment