மழையை நம்பி 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம்

விருதுநகர் : -விருதுநகரில் மழையை நம்பி மானாவாரி சாகுபடியாக 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் குறைந்த நீராதாரங்கள், கண்களுக்கு எட்டிய துாரம் வரை தரிசுக் காடுகள், மரங்கள் இல்லாத சாலைகள் என மழையின்றி ஆண்டு முழுவதும் வறட்சியே நிலவுகிறது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடக்கிறது. அதில் 80 ஆயிரம் ஏக்கர் மானாவாரி சாகுபடி தான். தென்மேற்கு பருவ மழையை காட்டிலும் வடகிழக்கு பருவ மழை மட்டுமே மானாவாரி விவசாயிகளுக்கு கை கொடுக்கிறது.இந்தாண்டு ஆவணி துவக்கத்தில் எரிச்சநத்தம், சாத்துார், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, மல்லாங்கிணர் உள்ளிட்ட பகுதிகளில் மழையை நம்பி 20 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளனர்.

ஜூனில் துவங்கிய தென் மேற்கு பருவமழை முடியும் தருவாயில் இருந்தாலும் நவம்பரில் துவங்க உள்ள வடகிழக்கு பருவமழையை நம்பி உள்ளனர்.

Related posts

Leave a Comment