மாவட்டத்தில் நகரும் ரேஷன் கடைகள்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 60 நகரும் ரேஷன் கடைகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

இதன் மூலம் 8 ஆயிரம் கார்டுதாரர்கள் பயன்பெறுவர்.மக்கள் எளிதில் அணுக இயலாத, பகுதி நேர கடைகள் திறக்க வாய்ப்பில்லாத பகுதிகளில் நகரும் ரேஷன் கடைகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 110 பகுதிகள் பரிந்துரைக்கப் பட்டது. இதில் முதற்கட்டமாக 60 பகுதிகள் மட்டும் நகரும் ரேஷன் கடைகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.அதன்படி ஸ்ரீவில்லிபுத்துாரில் 12, சாத்துாரில் 11, திருச்சுழியில் 14, அருப்புக்கோட்டையில் 16, விருதுநகரில் 4, ராஜபாளையத்தில் 2, சிவகாசியில் 1 என 60 கடைகள் விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறது. இதற்காக கலெக்டர் கண்ணன் தலைமையில் வழித்தடங்கள், விநியோகிக்கும் நேரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Related posts

Leave a Comment