தவிர்ப்போமே! ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பு; புகை மூட்டத்தால் உருவாகுது விபத்து,நோய்கள்

சிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பதால் ஏற்படும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு விபத்து,தொற்றுநோய்கள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது.

மாவட்டத்தில் நகர், கிராம பகுதிகளில் தினந்தோறும் அதிகப்படியான குப்பை சேர்கின்றன. கிராம பகுதிகளை விட நகர் பகுதிகளில் குடியிருப்புகள், கடைகள், தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. இவைகளின் மூலம் கிடைக்கும் குப்பையை சேகரிக்க ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைத்திருக்க வேண்டும். பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தொழிற்சாலைகள், கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் குப்பை தொட்டிகள் வைத்திருப்பதில்லை. இதனால் கழிவுகள் ஆங்காங்கே வீசப்படுகின்றன.

தொட்டிகள் வைத்திருந்தாலும் முறையாக பயன்படுத்தாமல் மக்களும் அலட்சிய போக்கினை கடை பிடிக்கின்றனர். கொட்டப்படும் குப்பையை உள்ளாட்சிகள் முறையாக சேகரித்து நகரின் வெளிப்பகுதியில்தான் கொட்டி அழிக்க ,எரிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதில்லை. எங்கு குப்பை அதிகம் சேர்கிறதோ அங்கேயே எரித்து விடுகின்றனர்.

இதில் ஏற்படும் புகையால் கண் எரிச்சல் ஏற்படுகிறது. சுற்றுச்சூழலம் மாசுபடுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் தொற்றுநோய்களுக்

Related posts

Leave a Comment