கோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது.. விவேக் கண்ணீர்!

சென்னை: கோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது என நடிகர் விவேக் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாக பாட்டு உலகில் கோலொச்சி வந்த ஆண் குயில் என அழைக்கப்படும் எஸ்பி பாலசுப்ரமணியம் இன்று காலமானார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விவேக்கும் எஸ்பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, பெரும் இழப்பு இசை உலகத்திற்கு..பரந்து விரிந்த இந்த உலகமெல்லாம் பறந்து பறந்து 40,000 பாடல்களுக்கு மேல் பாடி, கோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment