ஓட்டுச்சாவடி தேவை எனில் கருத்து

விருதுநகர் : ”மாவட்டத்தில் 1881 ஓட்டுச்சாவடிகள் உள்ள நிலையில் கூடுதலாக அமைப்பது குறித்து கட்சியினர் கருத்துக்கள் தெரிவிக்கலாம்,” என, கலெக்டர் கண்ணன் கூறினார்.

விருதுநகரில் நடந்த ஓட்டுச்சாவடி பகுப்பாய்வு பணிகள் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் அவர் பேசியதாவது:2021 ஜன.1ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் சரிபார்க்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக அனைத்து வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் அலுவலகங்களில் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய வாக்காளர் சேவை வசதி இணையத்திலும், ‘ஓட்டர் ஹெல்ப்லைன்’ என்ற செயலியிலும் சரிபார்த்து கொள்ளலாம், என்றார். எஸ்.பி.,பெருமாள், சப் கலெக்டர் தினேஷ்குமார் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment