கேரளா செல்லும் காளவாசல் சுண்ணாம்பு

விருதுநகர் : கட்டுமானத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிபடுத்தும் விருதுநகர் காளவாசல் சுண்ணாம்புக்கு கேரள கட்டுமான பொறியாளர்கள் மத்தியில் மவுசு அதிகரிக்க வியாபாரிகள் அதிகம் வாங்கி செல்கின்றனர்.

விருதுநகர் அருகே புளியங்குளம் பகுதியில் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் சுண்ணாம்பு கட்டிகளை தொழிலாளர்கள் சேகரிக்கின்றனர். அவற்றுடன் அடுப்புக்கறியை கலந்து சுண்ணாம்பு சூளையில் ஐந்து மணி நேரம் வேக வைக்கின்றனர். கொதிக்கும் சுண்ணாம்பு கட்டிகளை சூளையில் இருந்து எடுத்து தரையில் கொட்டி தண்ணீர் தெளிக்கின்றனர். அப்போது சுண்ணாம்பு கட்டிகள் நுரை பொங்கி உடைந்து துாள் துாளாகிறது.அவற்றை சுத்தியலால் உடைத்து இரும்பு சல்லடையில் கொட்டி சலித்து சுண்ணாம்பு பவுடராக்குகின்றனர்.

30 கிலோ சிப்பம் ரூ.120க்கு விற்கின்றனர். ஏஜன்ட்டுகள் மூலம் காளவாசல் சுண்ணாம்பு மூடைகள் கேரளாவிற்கு பெருமளவு செல்கிறது.

Related posts

Leave a Comment