சசிகலா விரைவில் விடுதலையாவார்: சொல்கிறார் பா.ஜ., நயினார் நாகேந்திரன்

சிவகாசி:”சசிகலா விரைவில் விடுதலையாவார்,” என பா.ஜ., மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

சிவகாசியில் மேலும் அவர் கூறியதாவது:”பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் இரட்டை குழல் துப்பாக்கி போல் இணைந்து செயல்படு கின்றன. பா.ஜ., ஜெ.,வால் விரும்பிய கட்சி. இனி அமையும் அமைச்சரவையில் பா.ஜ., அங்கம் வகிக்கும். சசிகலா கட்சிக்கு வந்தால் கூட்டணியில் அங்கம் வகிப்பது குறித்து அகில இந்திய தலைவர்களின் முடிவுக்கு கட்டுப்படுவோம்.

தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் வெற்றி பெறுவோம் என மாநில தலைவர் முருகன் கூறினாலும் கூட்டணியில் இல்லை என அவர் கூறவில்லை. தற்போது வரை அ.தி.மு.க.,வுடன் தான் கூட்டணியில் இருக்கிறோம். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மோதல் போக்கை நாங்கள் சாதகமாக பயன்படுத்த மாட்டோம். இருவரும் இணைந்திருந்தால் தான் நல்லது.

ஒத்த தலைமை, ஒத்த கருத்தோடு இருந்தால்தான் தொண்டர்கள் உற்சாகமாக செயல்படுவர். ரஜினி கட்சி துவக்குவதை வரவேற்கிறோம். ஆனால் அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வில்லை,” என்றார்.

Related posts

Leave a Comment