தொண்டர்களை வசைபாடுவது தி.மு.க. கலாசாரம்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி காட்டம்

ராஜபாளையம்:தொண்டர்களை வசைபாடுவது தி.மு.க., கலாசாரம் , சகோதரர்களாக பேணுவது அ.தி.மு.க., கலாசாரம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

ராஜபாளையத்தில் அவர் கூறியதாவது: எம்.எல்.ஏ., என்ற முறையில் தி.மு.க.,வினரே கோரிக்கை விடுத்தாலும் அதை செய்து தருவது அ.தி.மு.க., அரசு.நாங்கள் செய்து முடித்த பின்னரே வெளியே சொல்வோம்.தி.மு.க., வோ நாங்கள் போராட்டம் செய்ததால் தான் பணிகள் நடைபெற்றது என கூறுகிறது. இது தவறு. தி.மு.க., கூட்டத்தில் தொண்டர் ஒருவர் ராசா வாழ்க என கூறியதற்கே அவர் நாயே என திட்டுகிறார். ஒழிக என்று கூறினால் என்ன செய்வார். தொண்டர்களை வசைபாடுவது தி.மு.க., கலாசாரம், என்றார்.

Related posts

Leave a Comment