பள்ளியில் மின்னொளி மைதானம் திறப்பு…

வத்திராயிருப்பு : விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழகத்தின் சார்பில் வத்திராயிருப்பு ஹிந்து மேல்நிலைப் பள்ளி வாலிபால் மைதானத்தில் அமைக்கப்பட்ட மின் கோபுரங்கள் துவக்க விழா, நவீனப்படுத்தப்பட்ட மின்னொளி மைதான திறப்பு விழா நடந்தது.

பள்ளி முன்னாள் செயலாளர் சீதாராமன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ராஜசேகரன் வரவேற்றார். மாவட்ட கைப்பந்து கழக தலைவர் துரைசிங் திறந்து வைத்தார். செயலாளர் செல்வகணேஷ் புதிய மின் கோபுரங்களை இயக்கினார். கைப்பந்து கழக தலைமை செயலாளர் பொன்னியின் செல்வன், பொருளாளர் விநாயகமூர்த்தி பேசினர். பள்ளி உறுப்பினர்கள் அரிகரசுப்ரமணியம், விஜயா நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர்கள் ராம்சுந்தர் பாலசுப்பிரமணி ஏற்பாடு செய்தனர். ஆசிரியர் ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment