மஞ்சக்கருவில்லா அதிசய முட்டை

காரியாபட்டி : காரியாபட்டி அருகே கடையில் விற்கபட்ட மஞ்சக்கருவில்லாத அதிசய முட்டை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுகாரியாபட்டி அடுத்த வக்கணாங்குண்டு ஜெயவேல் பெட்டிக்கடையில் தினமும் முட்டை அவித்து மிளகுப்பொடி, காரப் பொடி துாவி விற்பனை செய்வது வழக்கம்.

அப்படி முட்டை அவித்து இரண்டாக வெட்டியபோது மஞ்சக்கரு இல்லாமல் வெறுமனே வெள்ளைக்கருவாகவே இருந்தது. இதை அக்கிராமத்தினர் ஆச்சரியமாகவும் பார்த்தனர்.கடை உரிமையாளர் ஜெயவேல்: முட்டை அவித்து விற்பனை செய்து வருவேன். ஒரு முட்டையை வெட்டிய போது மஞ்சக்கரு இல்லாமல் இருந்தது. என் வாழ் நாளில் இதுபோன்று முட்டையை பார்த்ததில்லை. அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது,என்றார்.

Related posts

Leave a Comment