தலைமை கூறினால் கன்னியாகுமரியில் போட்டி: பா.ஜ., துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி

ஸ்ரீவில்லிபுத்துார்:”தலைமை கூறினால் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்,” என பா.ஜ.,மாநிலதுணை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். ஸ்ரீவில்லிபுத்தூரில் அவர் கூறியதாவது:ஊரடங்கு காலத்தில் மத்தியரசால் பெண்களுக்கு500 ரூபாய் வங்கியில் போடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 பணம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில்பல்வேறு நபர்களுக்கு வீடு கட்டி தந்துள்ளது. இப்படி பல்வேறு திட்டங்களை முன்வைத்து 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம். அ.தி.மு.க.,வுடன் கூட்டணியா, தனித்து போட்டியா என்பது குறித்து அகில இந்திய தலைமை முடிவு செய்யும். கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வேறு நபர்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. தலைமை கூறினால் நான் போட்டியிடுவேன். அ.தி.மு.க.,விடம் துணை முதல்வர் பதவி, 60 சீட் கேட்பது போன்ற செய்திகள் உண்மையல்ல. 60 சீட் கிடைத்தாலும் வெற்றி பெறுவோம்,” என்றார்.

Read More

சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசி : சிவகாசி சிவன் கோயில் பகுதி ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மண் அள்ளும் இயந்திரம் உதவியுடன் இடித்து அகற்றப்பட்டன. இக்கோயில் பகுதியில் கடைகள் வைத்துள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்பட்டனர். நடைபாதை கடைகளும் அதிகளவில் இருந்தன. ஆக்கிரமிப்புகளை அகற்ற சமூக அமைப்புகள் கோரினர். நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் படி கிழக்கு, தெற்கு ரதவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, எஸ்.ஐ.,க்கள் பாண்டியன், ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். மீண்டும் ஆக்கிரமிப்பு நடக்க நகராட்சி அதிகாரிகள், போலீசார் கண்காணிக்க வேண்டும் .

Read More

போயே போச்சு! உள்ளாட்சிகளில் மாஸ் கிளீனிங் இன்றி சுகாதாரக்கேடு… குப்பை,சாக்கடை கழிவுகளால் தொற்று பரவலுக்கு வழி

சிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் சாக்கடை, குப்பை அகற்றப்படாமல் பல இடங்கள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் தொற்று பரவலுக்கு வழி வகுக்கிறது. இதை தவிர்க்க அனைத்து பகுதிகளிலும் ‘மாஸ் கிளீனிங்’ அவசியமாகிறது. மாவட்டத்தில் சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர் , அருப்புக்கோட்டை ராஜபாளையம் ,ஸ்ரீவில்லிபுத்துார்,சாத்துார் என ஏழு நகராட்சிகள் உள்ளன. இதுபோன்று 450 ஊராட்சிகள்,9 பேரூராட்சிகள் உள்ளன. நகராட்சி பகுதிகளில் வாரம் ஒரு முறை ‘மாஸ் கிளீனிங்’ நடைபெறுவதுண்டு. இதன் படி நகராட்சியில் ஏதாவது ஒரு வார்டினை தேர்வு செய்து அங்குள்ள பிரச்னைகள் சரி செய்யப்படும். உதாரணமாக தெருக்களில் உள்ள குப்பை ,சாக்கடை கழிவு அகற்றப்படும். ரோடு சுத்தம் செய்தல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெறும். நகரின் அனைத்து சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் , துாய்மை பணியாளர்கள் பங்கு பெறுவர். இப்பணிகளால் ஒவ்வொறு வார்டும் சுகாதாரமான…

Read More

ராஜபாளையம் அம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்துார் முப்புடாதி அம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா தொடங்கியது. 13 சமூகத்திற்கு பாத்தியப்பட்ட இவ்விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் விழாவை முன்னிட்டுகொடி மரத்திற்கு சிறப்பு பூஜை, சந்தனம் பன்னீர் உள்ளிட்ட 16 வகை அபிேஷகம் நடந்தது.முப்புடாதி அம்மன், வடசாகி அம்மன், வள்ளி தெய்வானையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். முக்கிய நிகழ்ச்சியாக ஆக். 9 ல் பூக்குழி விழா நடக்கிறது. தினமும் அம்மன் சப்பரத்தில் உலா வருதலும் நடக்கிறது

Read More

டாஸ்மாக் திறக்க தடை

டாஸ்மாக் திறக்க தடைவிருதுநகர்: கலெக்டர் கண்ணன் கூறியதாவது: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள், எப்.எல்.2, 3 ஆகியவை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மீறி திறந்தால் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஓட்டலில் உள்ள பார்கள் திறக்கப்பட்டிருந்தாலும் மது விற்பது தெரிய வந்தால் உரிமங்கள் நிறுத்தி வைத்தல், ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்

Read More

திருவண்ணாமலை கோயிலில் நாளை அதிகாலை 2:30 மணிக்கு நடை திறப்பு

ஸ்ரீவில்லிபுத்துார் : திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி 3ம் சனி உற்ஸவத்தை முன்னிட்டு நாளை (அக்.3)அதிகாலை 2:30 மணிக்கு நடை திறக்கபட்டு சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபட உள்ளனர். இதை முன்னிட்டு முதியவர்கள், குழந்தைகள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் மலையேறுவதை தவிர்க்கவும், பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கபடுவார்கள்.

Read More