சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசி : சிவகாசி சிவன் கோயில் பகுதி ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மண் அள்ளும் இயந்திரம் உதவியுடன் இடித்து அகற்றப்பட்டன.

இக்கோயில் பகுதியில் கடைகள் வைத்துள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்பட்டனர். நடைபாதை கடைகளும் அதிகளவில் இருந்தன. ஆக்கிரமிப்புகளை அகற்ற சமூக அமைப்புகள் கோரினர். நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் படி கிழக்கு, தெற்கு ரதவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, எஸ்.ஐ.,க்கள் பாண்டியன், ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். மீண்டும் ஆக்கிரமிப்பு நடக்க நகராட்சி அதிகாரிகள், போலீசார் கண்காணிக்க வேண்டும் .

Related posts

Leave a Comment