தலைமை கூறினால் கன்னியாகுமரியில் போட்டி: பா.ஜ., துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி

ஸ்ரீவில்லிபுத்துார்:”தலைமை கூறினால் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்,” என பா.ஜ.,மாநிலதுணை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் அவர் கூறியதாவது:ஊரடங்கு காலத்தில் மத்தியரசால் பெண்களுக்கு500 ரூபாய் வங்கியில் போடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 பணம் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில்பல்வேறு நபர்களுக்கு வீடு கட்டி தந்துள்ளது. இப்படி பல்வேறு திட்டங்களை முன்வைத்து 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம். அ.தி.மு.க.,வுடன் கூட்டணியா, தனித்து போட்டியா என்பது குறித்து அகில இந்திய தலைமை முடிவு செய்யும்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வேறு நபர்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. தலைமை கூறினால் நான் போட்டியிடுவேன். அ.தி.மு.க.,விடம் துணை முதல்வர் பதவி, 60 சீட் கேட்பது போன்ற செய்திகள் உண்மையல்ல. 60 சீட் கிடைத்தாலும் வெற்றி பெறுவோம்,” என்றார்.

Related posts

Leave a Comment