போயே போச்சு! உள்ளாட்சிகளில் மாஸ் கிளீனிங் இன்றி சுகாதாரக்கேடு… குப்பை,சாக்கடை கழிவுகளால் தொற்று பரவலுக்கு வழி

சிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் சாக்கடை, குப்பை அகற்றப்படாமல் பல இடங்கள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் தொற்று பரவலுக்கு வழி வகுக்கிறது. இதை தவிர்க்க அனைத்து பகுதிகளிலும் ‘மாஸ் கிளீனிங்’ அவசியமாகிறது.

மாவட்டத்தில் சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர் , அருப்புக்கோட்டை ராஜபாளையம் ,ஸ்ரீவில்லிபுத்துார்,சாத்துார் என ஏழு நகராட்சிகள் உள்ளன. இதுபோன்று 450 ஊராட்சிகள்,9 பேரூராட்சிகள் உள்ளன. நகராட்சி பகுதிகளில் வாரம் ஒரு முறை ‘மாஸ் கிளீனிங்’ நடைபெறுவதுண்டு. இதன் படி நகராட்சியில் ஏதாவது ஒரு வார்டினை தேர்வு செய்து அங்குள்ள பிரச்னைகள் சரி செய்யப்படும். உதாரணமாக தெருக்களில் உள்ள குப்பை ,சாக்கடை கழிவு அகற்றப்படும். ரோடு சுத்தம் செய்தல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெறும். நகரின் அனைத்து சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் , துாய்மை பணியாளர்கள் பங்கு பெறுவர்.

இப்பணிகளால் ஒவ்வொறு வார்டும் சுகாதாரமான நிலைக்கு மாறும். ஆனால் தற்போது மாஸ் கிளீனிங் என்பது எங்கும் முறையாக நடப்பதில்லை. இது போன்றுதான் பேரூராட்சி, ஊராட்சிகளின் நிலையும் உள்ளது. இதனால் சுகதாரக்கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தி என கொடும் நோய்களும் உருவாகின்றன. மாஸ் கிளீனிங் முறையை உள்ளாட்சிகளில் முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்ட வேண்டும்.

…………………முறைப்படுத்தலாமே நகராட்சி பகுதிகளில் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த மாஸ் கிளீனிங் நடைபெறவில்லை. தெருக்களில் குப்பை , ரோட்டிலுள்ள கற்கள், துாசிகள் அகற்றம் போன்ற பணிகள் இதில் நடைபெற்று வந்தன. இப் பணிகள் மீண்டும் நடைபெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.முனீஸ்பாண்டி, வழக்கறிஞர், சிவகாசி.

Related posts

Leave a Comment