ராஜபாளையம் அம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்துார் முப்புடாதி அம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா தொடங்கியது.

13 சமூகத்திற்கு பாத்தியப்பட்ட இவ்விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் விழாவை முன்னிட்டுகொடி மரத்திற்கு சிறப்பு பூஜை, சந்தனம் பன்னீர் உள்ளிட்ட 16 வகை அபிேஷகம் நடந்தது.முப்புடாதி அம்மன், வடசாகி அம்மன், வள்ளி தெய்வானையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். முக்கிய நிகழ்ச்சியாக ஆக். 9 ல் பூக்குழி விழா நடக்கிறது. தினமும் அம்மன் சப்பரத்தில் உலா வருதலும் நடக்கிறது

Related posts

Leave a Comment