கோடையிலும் குளுமை தரும் பூங்காவனம்:சாத்தூர்

சாத்துார்:சாத்துார் வைப்பாற்றின் கரையில் அமைந்துள்ள யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட நந்தவனம் கோடையிலும் குளுமை தரும் பூங்காவனமாக உள்ளது.

இங்கு வேம்பு, புங்கை, புளியமரம், ஈச்சமரம் என பலன் தரும் மரங்கள் வளர்க்கப்படு வருகிறது. இவை பறவைகள், அணில்களின் சரணாலயமாக விளங்குகிறது. மயில்கள் உலாவும் அழகை காண கண்கோடி வேண்டும்.

நந்தவனத்தில் துளசி, சிரியா நங்கை உள்ளிட்ட மூலிகை செடிகள் அழகிற்கு அழகு சேர்க்கிறது. இதனருகில் உள்ள சக்தி விநாயகர்கோவில் வழிபடும் பக்தர்கள் நந்தவனம் செல்கின்றனர்.

அங்கு இயற்கையான சூழலால் மன சாந்தி அடைகின்றனர். தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் வைப்பாற்றின் கரையில் நூற்றுக்கணக்கான பனை மரவிதைகளை விதைத்துள்ளனர். மாசில்லா சாத்துார் உருவாக இளைஞர்களுக்கு ஊக்கம் ஏற்படுத்தும் வகையில் யாதவர் சமுதாய நந்தவனம் விளங்குகிறது.

ஊக்கப்படுத்துங்க

சாத்துாரில் சாலை விரிவாக்கம் செய்ய நூற்றாண்டு பழமையான மரங்கள் வெட்டப்பட்டன. மரியன் ஊரணியில் தொண்டு நிறுவனங்கள் நகராட்சியிடம் அனுமதி பெற்று வேம்பு, புங்கை, மரங்கள் நட்டு வளர்த்தனர். ஊரணியில் பூங்காக அமைப்பதாக கூறி கரையில் இருந்த மரங்களை நகராட்சி வெட்டியது. மரம் வளர்ப்பை நகராட்சி ஊக்கப்படுத்த வேண்டும்.

மொராஜி, சமூக ஆர்வலர்

தனியார் பூங்காக்கள்

நகராட்சி பூங்காக்கள் தனியார் நந்தவனம் போல் பராமரிக்கப்படுவதில்லை. பல பூங்காக்கள் சேதமடைந்துள்ளன. மரங்கள் பட்டு போய் சாய்ந்து கிடக்கின்றன. வைப்பாறு மேம்பாட்டு குழு மூலம் சாத்துார் வைப்பாற்றின் கரையில் 500 மரக்கன்றுகள் நடவும், வெள்ளக்கரை ரோட்டில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க உள்ளோம்.

முனியசாமி, தனியார் ஏஜென்சி

Related posts

Leave a Comment