விருதுநகர்:விருதுநகர் நகராட்சி சார்பில் தலா 10 லட்சம் லிட்டர் குடிநீரை தேக்கி வைக்கும் அளவு இரண்டு மேல்நிலை தொட்டிகள் அகமது நகர், கல்லுாரி ரோட்டில் உள்ளது.இவை செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனால் நகரில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் நடக்கிறது.
குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனைக்குட்டம் அணையில் 10 லட்சம் லிட்டர், தாமிரபரணி குடிநீர் 30 லட்சம் என 40 லட்சம் லிட்டர் கிடைக்கிறது. குடிநீர் தேவை 70 லட்சம் லிட்டர். 30 லட்சம் லிட்டர் குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது. ஒண்டிப்புலி நீராதாரமும் கிடைக்கவில்லை. எனவே இரண்டு மேல்நிலை குடிநீர் தொட்டிகளும் குழாய் இணைப்பு கொடுத்து செயல்பட துவங்கினால் தான் நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்ய இயலும்.