நோயை குணப்படுத்தும் அதலைக்காய்

அருப்புக்கோட்டை:முன்னோர்கள் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றி நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ்ந்தனர்.

தேவையற்றவைகளை உண்டு பலர் வயிற்றை குப்பை தொட்டியாக்கி விட்டனர். உடல் பருத்து 30 வயதிலேயே இருதய கோளாறு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற நோய்களுக்கு ஆளாகி வாழ்நாட்களை குறைத்து கொண்டு வருகின்றனர்.

இயற்கை ஏராளமான கொடைகளை அள்ளி தந்துள்ளது. அதில் ஒன்று அதலைக்காய். அருப்புக்கோட்டையில் விளைகிறது.பாகற்காய் வகையை சேர்ந்தது. இது விவசாய பயிர் இல்லை. மழைக்காலங்களில் தோட்டங்களின் ஓரத்தில், விளை நிலங்கள் அருகில், ரோடு ஓரங்களில் தானாக விளையும்.விவசாயிகளுக்கு முதலீடு இல்லாமல் லாபம் தரும் பயிர்.கால்சியம், புரதம், நீர்ச்சத்து, பொட்டாசியம் உட்பட ஏராளமான சத்துகள் உள்ளன. கசப்பு சுவை மிக்கது. அதலைக்காய் பொரியல், புளிக்குழம்பு அலாதி சுவை கொண்டது. சர்க்கரை கோய், புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, எச்.ஐ.வி., கிருமிகளை கொல்லும் நுண்ணுாட்ட சத்துக்கள் நிறைந்தது.

Related posts

Leave a Comment