பட்டாசு வியாபாரத்தை பெருக்குங்க

சிவகாசி : பட்டாசு வியாபாரத்தை பெருக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க காங்.,எம்.பி., மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி உள்ளார்.

ரூ. 80 ஆயிரம் கோடியில் சீன பட்டாசுகள் வியாபாரத்தில் உள்ள நிலையில் ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பிலான சிவகாசி பட்டாசுகளின் வியாபாரத்தை பெருக்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பட்டாசு விதிகளை அதிகாரிகள் முறையாக கையாளுகிறார்கள். பசுமை பட்டாசுகள் சிவகாசியில் தாயரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் அனுப்படுவது நமக்கு பெருமையான விஷயம். ஊரடங்கால் மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்திருக்கிறது. தீபாவளி சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் மக்களிடம் பணப்புழக்கம் வேண்டும். மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்க மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றார்.

Related posts

Leave a Comment