பி.ஓ.எஸ்., கருவிகளில் கைரேகை

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் துறை சார்பில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு மென்பொருள் பதிவேற்றம் செய்யப்பட்ட புதிய பி.ஓ.எஸ்., கருவிகளை கலெக்டர் கண்ணன் வழங்கினார்.

அப்ேபாது அவர் கூறியதாவது: முதற்கட்டமாக விருதுநகர் 109, சிவகாசி 147, திருச்சுழி 94 என 350 ரேஷன் கடைகளில் கைரேகை பதிவேற்றப்பட்டுள்ளது. கைரேகை பதிவை ஏற்காத பட்சத்தில் ஆதார் அட்டையை பயன்படுத்தி ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் மூலம் அத்தியாவசிய பொருட்கள் பெற்று கொள்ளலாம், என்றார். டி.ஆர்.ஓ., மங்களராமசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் கல்யாணக்குமார் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment