மழையால் உற்பத்தியாகிறது ‘கொசு’க்கள் …தடுக்கலாமே

சிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் பருவ மழை துவங்கிய நிலையில் நகர் மற்றும் கிராம பகுதிகளில் கழிவுநீர் செல்லும் ஓடை, சாக்கடை துார்வாரப்படாததால் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்திக்கு துணைபோகிறது .

இதை தடுக்க கொசுப்புழு ஒழிப்புணியை தற்போதே துவங்க வேண்டும்.மாவட்டத்தில் நகர் மற்றும் கிராம பகுதிகளில் மழைநீர், வீட்டுக் கழிவுநீர் வெளியேறுவதற்காக ஓடை மற்றும் தெருக்களில் சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இவைகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. ஓடைகளில் முட்புதர்களும், கோரைப்புற்களும் நிறைந்து தண்ணீர் ஓட்டத்தை தடுக்கிறது. நாளடைவில் அந்த தண்ணீர் கழிவுநீராக மாறிவிடுகிறது. இதனால் அதிகளவில் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. பாலிதீன் கவர் உள்ளிட்ட பொருட்கள் ஓடையில் வீசப்படுதால் தண்ணீர் முற்றிலும் அடைப்பட்டு விடுகிறது.

இதில் அதிகளவில் கொசு உற்பத்தியாகிறது. இதன் மூலம் டெங்கு உள்ளிட்ட நோய்கள் எளிதாக பரவ வாய்ப்புள்ளது.தெருக்களில் உள்ள சாக்கடை பராமரிப்பின்றி குப்பை கொட்டப்பட்டு , மண் மூடியும் துார்ந்து விடுகிறது. இதனால் மழைநீருடன் கழிவுநீரும் தெருக்களில் ஓடுவதோடு சில நேரங்களில் வீட்டிற்குள்ளும் வந்து விடுகிறது. இதுவும் தொற்றுநோயினை உருவாக்குகிறது. தற்போது பருவமழையும் துவங்கி உள்ளதால் கொசு உற்பத்திக்கு ஏதுவாக அமையும் .இதை கருத்தில் கொண்டு கொசுப்புழு ஒழிப்புப் பணியினை துவங்குவதோடு குடியிருப்பு பகுதிகளில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

…..நடவடிக்கை எடுங்ககழிவுநீரில் உற்பத்தியாகும் கொசுக்களால்தான் டெங்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது. குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தாலும் அடுத்தடுத்து அனைவருக்கும் வந்து விடுகிறது. நகராட்சிகளில் போதுமான துாய்மை பணியாளர்கள் இல்லை. பெரும்பாலும் ஓய்வு பெற்ற நிலையில் புதிய பணியாளர்கள் நியமிக்கவில்லை. அதிகளவில் துாய்மை பணியாளர்களை நியமித்து ஓடைகள், சாக்கடையினை துார்வார வேண்டும். சுகாதாரப் பணிகளும் கண்துடைப்பாக இல்லாமல் முழுவீச்சில் நடைபெற வேண்டும்.டேனியல், சிவகாசி…………

Related posts

Leave a Comment