மார்க்கெட்டை செயல்படுத்துங்க

சிவகாசி : சிவகாசி அண்ணாதுரை காய்கறி மார்க்கெட்டை செயல்பாட்டுக்கு கொண்டு வர சிவகாசி வர்த்தகம் சங்கம் தலைவர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கலெக்டர் கண்ணனுக்கு அவர் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:சிவகாசி அண்ணாதுரை காய்கறி மார்க்கெட் கடந்த 6 மாதங்களாக கொரோனா தொற்றால் இடம் மாற்றப்பட்டு காரனேசன் காலனி மற்றும் உழவர் சந்தையில் செயல்படுகிறது. காரனேசன் காலனி நான்கு ரோடு சந்திக்கும் இடம். போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதால் நெரிசல் அதிகமாக உள்ளது. வியாபாரிகள் திறந்தவெளியில் வியாபாரம் செய்கிறார்கள். கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை. தீபாவளி உள்ளிட்ட விழாக்கள் வரும் காரணத்தால் வியாபாரம் அதிகளவில் நடைபெறும். இதை கருதி அண்ணாதுரை காய்கறி மார்க்கெட்டை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment