40 ஆண்டுக்கு பின் புதிய ரோடு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி – ராமசாமிபுரம் வரையிலான ஒரு கி.மீ., துாரமுள்ள ரோடு தினமலர் செய்தி எதிரொலியால் 40 ஆண்டுகளுக்கு பின் போடப்பட்டது.

பள்ளம் மேடாக மக்களுக்கு பயன் இன்றி காணப்பட்ட இந்த ரோடு தொடர்பாக தினமலர் நாளிதழில் அவ்வப்போது தொடர்ந்து செய்தி வெளியானது. இதையடுத்து ரோடு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான டெண்டரும் 2019 டிசம்பரில் விடப்பட்டது. டெண்டர் விட்டு பல மாதங்கள் ஆகியும் பணி துவங்கவில்லை. இதுகுறித்தும் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து இயந்திரங்கள் மூலம் ரோடு அமைக்கும் பணி துவங்கியது. தினமலர் செய்தியால்தான் 40 ஆண்டுகளுக்கு பிறகு ரோடு வந்தது என கஞ்சநாயக்கன்பட்டி மக்கள் நன்றி கூறினர்.

Related posts

Leave a Comment