தோனியின் வயதை சொல்லி சீண்டிய பதான்.. “ஒப்புக்கொள்ள மாட்டேன்”.. குதித்து வந்த யுவராஜ்.. சரவெடி பதில்!

துபாய்: சிஎஸ்கே கேப்டன் தோனியின் வயதை முன்னாள் வீரர் இர்பான் பதான் கிண்டல் செய்த நிலையில் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் இதற்கு மறைமுகமாக பதில் அளித்துள்ளார். 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கேப்டன் தோனியின் ஆட்டம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு போட்டியிலும் சிஎஸ்கேவின் தோல்விக்கு தோனிதான் காரணம் என்று புகார் வைக்கப்பட்டு வருகிறது. அதிலும் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிரான போட்டியில் தோனி டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார். தோனியின் மோசமான பேட்டிங் அந்த இரண்டு போட்டியிலும் சிஎஸ்கேவின் தோல்விக்கு காரணமாக இருந்தது.

மூச்சு வாங்கினார் அதிலும் இவர் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்யும் போது கஷ்டப்பட்டு மூச்சு வாங்கினார். தொண்டை வறண்டு, மூச்சு விட முடியாமால் தோனி கடுமையாக திணறினார். இதனால் கடைசி நேரத்தில் தோனிக்கு மருத்துவர்கள் வந்து உதவும் நிலை ஏற்பட்டது. தோனி இப்படி பார்ம் அவுட்டில் இருப்பதை முன்னாள் வீரர்கள் சிலர் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர்.

பதான்

பதான் சிஎஸ்கே கேப்டன் தோனியை, முன்னாள் வீரர் இர்பான் பதான் மறைமுகமாக விமர்சித்தார். அதில், சிலருக்கு வயது என்பது வெறும் எண்தான்.ஆனால் சிலருக்கு மட்டும் அது அணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார். அதாவது தோனி போன்ற வீரர்கள் இந்த வயதில் கிரிக்கெட் விளையாடுகிறார்கள், ஆனால் என்னை எல்லாம் வயதை காரணம் காட்டி ஓய்வு பெற வைத்துவிட்டனர் என்பது போல மறைமுகமாக தாக்கி இருந்தார்.

தோனியை கிண்டல் இந்திய அணியில் இருந்து பதானை நீக்கியது தோனிதான் என்று புகார் உள்ளது. இதனால் தோனியை சீண்டும் வகையில் பதான் இப்படி டிவிட் செய்தார். இந்த நிலையில் இர்பான் சொல்வது சரிதான் என்று ஹர்பஜன் ஒப்புக்கொண்டுள்ளார். ஆம் ஹர்பஜனும் தோனிக்கு எதிராக பேசி இருந்தார். அதில் இர்பான் சொன்னதுடன் 10000000 ஒத்துப்போகிறேன் என்று ஹர்பஜன் குறிப்பிட்டுள்ளார்.

தோனி கிண்டல் தோனியை இதன் மூலம் ஹர்பஜன் மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார். தோனியை இப்படி முன்னாள் வீரர்கள் கிண்டல் செய்யும் நிலையில் யுவராஜ் சிங் மட்டும் மறைமுகமாக தோனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஹைதராபாத்திற்கு எதிராக தோனியின் ஆட்டத்தை பார்த்துவிட்டு கிரிக்கெட் விமர்சகர் ஒருவர்.. மூத்த வீரர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும்.. ஐபிஎல் என்பது இளைஞர்களுக்காக விளையாட்டு என்று குறிப்பிட்டு இருந்தார்.

பதிலடி தோனியை சீண்டுவதற்காக அந்த கிரிக்கெட் விமர்சகர் இப்படி குறிப்பிட்டு இருந்தார். இதற்குதான் யுவராஜ் சிங் பதில் அளித்துள்ளார். அதில், நான் இதை ஒப்புக்கொள்ள மாட்டேன்..ஐபிஎல் என்பது இளம் வீரர்களுக்கான விளையாட்டு என்று ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் தோனியை மூத்த வீரர்கள் கிண்டல் செய்துள்ள நிலையில் யுவராஜ் சிங் மட்டும் மறைமுகமாக ஆதரவாக பேசியுள்ளார்.

Related posts

Leave a Comment