பெண் குழந்தை தின விழா

சாத்துார்:சிவகாசி ரைட் கிளப் பார் எஜுகேஷன், அமிர்தா இயற்கை உணவகம், இந்திரா நகர் அருகாமைப்பள்ளி சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா நடந்தது. ரைட் கிளப் தலைவர் சுமித் குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் காளிஸ்வரன், சுரேஷ்பாபு முன்னிலை வகித்தனர். சிவக்குமார் கராத்தே பயிற்சியளித்தார். கலைநிகழ்ச்சி நடந்தது. ஆசிரியை ஜெயமேரி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Read More

‘கிரிக்கெட் பேட்’ தயாரிக்க பயன்படும் குமிழ்தேக்கு

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி தரிசு நிலத்தில் கிரிக்கெட் பேட் தயாரிக்க பயன்படும் குமிழ் தேக்கு மரங்களை வளர்த்து குறுகிய காலத்தில் லாபம் ஈட்டி வருகிறார் இயற்கை ஆர்வலர் ஜவஹர். சுற்று சூழலை பாதுகாக்க இயற்கை ஆர்வலர்கள் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர். பயனுள்ள மரக்கன்றுகளை வளர்க்கும் போது வருமானமும் கிடைக்கிறது. மழை இன்றி விவசாயம் செய்வது கடினமாக உள்ளது. பெரும்பாலானோர் நுாறு நாள் வேலை உறுதியளிப்பு பணிக்கு செல்வதால் விவசாய தொழிலாளர்கள் கிடைக்காமல் வேளாண் பணிகளில் தொய்வு ஏற்பட்டு வருகிறது. இச்சூழ்நிலையில் காலியாக உள்ள நிலத்தை தரிசாக விட்டு வைப்பதை தவிர்த்து கிரிக்கெட் பேட் தயாரிக்க பயன்படும் குமிழ் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதில் சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அருப்புக்கோட்டையை சேர்ந்த இயற்கை ஆர்வலர் ஜவஹர் கூறியதாவது: தேக்குநட்டு பலன் கிடைக்க பல ஆண்டுகள் காத்திருப்பதை விட குமிழ்…

Read More

குதிரைகொம்பு * பட்டா, அடங்கல் சான்றிதழ் பெறுவது : ‘ஆன்லைன்’ பரிவர்த்தனை வீணானதா

காரியாபட்டி:மாவட்டத்தில் பட்டா, அடங்கல், வருமானம், இருப்பிடம், ஜாதி சான்றிதழ் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தும் கையூட்டு எதிர்பார்க்கும் சிலரால் தாமதமாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விவசாயிகள் விளை பொருள் உற்பத்திக்கு மானியம் பெற பட்டா, அடங்கல் சான்று அவசியம். மாணவர்களுக்கு வருமானம், இருப்பிடம், ஜாதி உள்ளிட்ட சான்றுகளை எளிமையாக பெறவும், லஞ்சம் தவிர்க்கனும் ஆன்லைன் பரிவர்த்தனையை வருவாய்த்துறை அமல்படுத்தியது. சான்று பெறுவோர் வி.ஏ.ஓ.,விடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, அதை வருவாய் ஆய்வாளர் சரி பார்த்து ஒப்புதல் வழங்குவார். இறுதியாக தாசில்தார் மூலம் சான்றுகள் வழங்கப்படும். கையூட்டு எதிர்பார்க்கும் சிலரால் விண்ணப்பித்த 45 நாட்களை கடந்தும் சான்று வழங்க காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. ‘கவனிப்பு’ இருந்தால் மட்டுமே ‘ஓ.கே.’ செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விவசாயிகள், மாணவர்கள் நலன் கருதி ஒரு வாரத்திற்குள் சான்றிதழ் வழங்க மாாவட்ட நிர்வாகம் நடவடிக்கை…

Read More

தேய்பிறை அஷ்டமி

விருதுநகர்:விருதுநகரில் நடந்த மாவட்ட யோகா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா அம்பாள் ராமசாமி யோகாசன மையத்தில் நடந்தது. 8 முதல் 55 வயது வரை உள்ள அனைத்து பிரிவுகளிலும் போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற 52 பேருக்கு மாவட்ட யோகாசன சங்க தலைவர் முத்துமணி பரிசுகள் வழங்கினார். இவர்கள் மாநில போட்டிக்கு தேர்வாகினர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, செல்வராஜன், சங்கரபாண்டியன் செய்தனர்.

Read More