‘கிரிக்கெட் பேட்’ தயாரிக்க பயன்படும் குமிழ்தேக்கு

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி தரிசு நிலத்தில் கிரிக்கெட் பேட் தயாரிக்க பயன்படும் குமிழ் தேக்கு மரங்களை வளர்த்து குறுகிய காலத்தில் லாபம் ஈட்டி வருகிறார் இயற்கை ஆர்வலர் ஜவஹர்.

சுற்று சூழலை பாதுகாக்க இயற்கை ஆர்வலர்கள் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர். பயனுள்ள மரக்கன்றுகளை வளர்க்கும் போது வருமானமும் கிடைக்கிறது. மழை இன்றி விவசாயம் செய்வது கடினமாக உள்ளது. பெரும்பாலானோர் நுாறு நாள் வேலை உறுதியளிப்பு பணிக்கு செல்வதால் விவசாய தொழிலாளர்கள் கிடைக்காமல் வேளாண் பணிகளில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.

இச்சூழ்நிலையில் காலியாக உள்ள நிலத்தை தரிசாக விட்டு வைப்பதை தவிர்த்து கிரிக்கெட் பேட் தயாரிக்க பயன்படும் குமிழ் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதில் சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அருப்புக்கோட்டையை சேர்ந்த இயற்கை ஆர்வலர் ஜவஹர் கூறியதாவது: தேக்குநட்டு பலன் கிடைக்க பல ஆண்டுகள் காத்திருப்பதை விட குமிழ் தேக்கு மரம் நட்டு குறுகிய காலத்தில் அதிக வருமானம் பார்த்து விடலாம்.

ஏக்கருக்கு 200 மரங்கள் நடலாம். பாசனம் மற்றும் பராமரிப்பு போதும்.ஏழே ஆண்டு களில் ஏக்கருக்கு ரூ.20 லட்சம் கிடைக்கும்.குமிழ் மரம் வளர்ப்பது தெரிந்தால் மர வியாபாரிகள் தேடி வந்து பணம் கொடுத்து மரங்களை வெட்டி செல்வர். தரிசு நிலம், வாய்க்கால், வரப்பு, காலி இடம், விவசாய நிலத்தை சுற்றி வளர்க்கலாம் என்றார். தொடர்புக்கு 93456 78949

Related posts

Leave a Comment