குதிரைகொம்பு * பட்டா, அடங்கல் சான்றிதழ் பெறுவது : ‘ஆன்லைன்’ பரிவர்த்தனை வீணானதா

காரியாபட்டி:மாவட்டத்தில் பட்டா, அடங்கல், வருமானம், இருப்பிடம், ஜாதி சான்றிதழ் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தும் கையூட்டு எதிர்பார்க்கும் சிலரால் தாமதமாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விவசாயிகள் விளை பொருள் உற்பத்திக்கு மானியம் பெற பட்டா, அடங்கல் சான்று அவசியம். மாணவர்களுக்கு வருமானம், இருப்பிடம், ஜாதி உள்ளிட்ட சான்றுகளை எளிமையாக பெறவும், லஞ்சம் தவிர்க்கனும் ஆன்லைன் பரிவர்த்தனையை வருவாய்த்துறை அமல்படுத்தியது. சான்று பெறுவோர் வி.ஏ.ஓ.,விடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, அதை வருவாய் ஆய்வாளர் சரி பார்த்து ஒப்புதல் வழங்குவார்.

இறுதியாக தாசில்தார் மூலம் சான்றுகள் வழங்கப்படும். கையூட்டு எதிர்பார்க்கும் சிலரால் விண்ணப்பித்த 45 நாட்களை கடந்தும் சான்று வழங்க காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. ‘கவனிப்பு’ இருந்தால் மட்டுமே ‘ஓ.கே.’ செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விவசாயிகள், மாணவர்கள் நலன் கருதி ஒரு வாரத்திற்குள் சான்றிதழ் வழங்க மாாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

உறவினருக்கு ஓ.பி.சி., சான்று பெற ஆன்லைனில் விண்ணப்பித்தேன். நிராகரிக்கப்பட்டதாக தகவல் வந்தது. அதற்கான காரணத்தை கேட்டேன். பதில் இல்லை. படித்தவர்களுக்கே இந்நிலை என்றால் பாமர மக்களின் கதி என்னவாகும் என்பதை யோசிக்க வேண்டும். மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.விஜயரகுநாதன், சமூக ஆர்வலர், காரியாபட்டி.

Related posts

Leave a Comment