veerapandiyakattapomman

ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாளில் அவரது நினைவுகளை போற்றி வணங்குகிறேன்.. இவண்… சாத்தூர் திரு. S.V.சீனிவாசன் B.Com அவர்கள் ,திராவிட முன்னேற்றக் கழகம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி #வீரபாண்டியகட்டபொம்மன்#veerapandiyakattapomman

Read More

கஞ்சாவை கண்டித்து தனி ஆளாக மறியல்

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் நடக்கும் கஞ்சா விற்பனையால் குடும்பமே பாதிக்கப்படுவதாக கூறி பெண் ஒருவர் தனி ஆளாக ரோடுமறியலில் ஈடுபட்டார். ராஜபாளையம் சுற்று பகுதிகளில் கஞ்சா, போதை பாக்குகள் விற்பனை 24 மணி நேரமும் நடக்கிறது. போதையின் பிடியில் சிக்குவோர் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். போலீசார் பெயரளவிற்கு வழக்குகள் பதிந்து கணக்கு காட்டுகிறார்களே தவிர நடவடிக்கை என்பது அறவே இல்லை. இந்நிலையில் முடங்கியாறு ரோட்டை சேர்ந்த செல்வராணி 32,போலீசாரை கண்டித்தும், பல குடும்பங்களை சீரழிக்கும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க கோரி முடங்கியாறு சாலையின் குறுக்கே செங்கல்களை அடுக்கி தனி ஆளாக ரோட்டின் நடுவே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். தடுக்காவிட்டால் தீக் குளித்து தற்கொலை செய்வதாக தெரிவித்தார். வடக்கு போலீசார் செல்வராணியை அழைத்து சென்று எச்சரிக்கை செய்து அனுப்பினர்.செல்வராணி கூறியதாவது: தினக்கூலியாக உள்ள தனது…

Read More

தொடரும் மின் தடையால் பாதிப்பு

ராஜபாளையம் : ராஜபாளையம் அடுத்த செட்டியார்பட்டி சுற்றுபகுதிகளில் ஏற்பட்ட தொடர் மின்தடையால் உற்பத்தி சார்ந்த தொழில் துறையினர் பாதிக்கின்றனர்.இப்பகுதிகளில் நேற்று முன் தினம் ஏற்பட்ட இடி மின்னல் காரணமாக தொடர்ந்த மின் வெட்டு அவ்வப்போது தொடர்கிறது. விசைத்தறிக்கூடங்கள், ஆயத்த ஆடை நிறுவனங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின. மின் துறையினர் கூறுகையில்,மெயின் சப்ளை பிளீடர் பகுதி தடையால் இப்பிரச்னை ஏற்பட்டது என்கின்றனர். மழைக்காலம் தொடங்கும் முன் இது போன்ற பிரச்னைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read More

சேமடைந்த மின்கம்பம்

சிவகாசி அருகே வடமலாபுரத்தில் சேமடைந்துள்ள மின்கம்பத்தால் விபத்து அபாயம் உள்ளது. ஏதேனும் விபத்து ஏற்படும் முன் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.முருகன்,சிவகாசி.

Read More

சதுரகிரியில் நவராத்திரி திருவிழா காப்பு கட்டுடன் நாளை துவக்கம்

வத்திராயிருப்பு:சதுரகிரியில் நவராத்திரி திருவிழா நாளை (அக்.17) ஆனந்தவல்லி அம்மன் மண்டபத்தில் காப்புக்கட்டுடன் துவங்குகிறது. மதுரை மாவட்டம் சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்க சுவாமி, சந்தனமகாலிங்க சுவாமி, சுந்தரமூர்த்தி சுவாமி கோயில்கள் உள்ளன. இங்குள்ள ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் நடக்கும் நவராத்திரி திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் முதல் நாளில் காப்பு கட்டி ஒன்பது நாட்கள் கோயிலிலேயே தங்கி விரதம் இருப்பார்கள். இறுதிநாளில் அம்மன் அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெறும். விழா நாட்களில் அம்மன் தினமும் ஒரு அலங்காரத்தில் காட்சியளிப்பார். இவ்விழாவில் நாளை காலை அம்மன் மண்டபத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதல், சிறப்பு அலங்கார வழிபாடுகள் நடக்கிறது. ஏற்பாடுகளை ஏழூர் சாலியர் சமுதாய நிர்வாகிகள், கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர். இவ்விழாவில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும், என ஹிந்து அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Read More

விளையாட்டு விடுதிகளுக்கு ரூ.7.75 கோடி ஒதுக்கீடு

விருதுநகர்:கிராம இளைஞர்களின் விளையாட்டு திறன்களை மேம்படுத்தி மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானங்களின் வளாகத்தில் நவீன வசதிகளுடன் விளையாட்டு விடுதிகள் கட்டப்பட உள்ளன. இதன்படி விருதுநகர், காஞ்சிபுரத்தில் தலா ரூ.1.40 கோடி, திருவாரூரில் ரூ.1.70 கோடி, சேலத்தில் ரூ.1.63 கோடி, திருவள்ளூரில் ரூ.1.57 கோடி மதிப்பில் விரைவில் கட்டுமானப்பணி துவங்க உள்ளது.

Read More

தவசிவலிங்கசுவாமி கோயில் மண்டல பூஜை

சிவகாசி : விருதுநகர் மூளிப்பட்டி தவசிலிங்கசுவாமி கோயில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு 48 வது நாள் மண்டல பூஜை நடந்தது.அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் குலதெய்வ கோயிலான இங்கு அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா ஆக. 28ல் நடந்தது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. 48 வது நாளான நேற்று பூர்த்தி பூரண மண்டல பூஜை நடந்தது. விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், லஷ்மி பூஜை, பூர்ணாஹதி மற்றும் மகாதீபாராதனை நடந்தது. மண்டல பூஜையை முன்னிட்டு சுவாமிக்கு பாலாபிஷேகம், திருநீரு , சந்தனம், இளநீர் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஸ்தபதி கருப்பசாமி, கோயில் தலைவர் செல்லசாமி, செயலாளர் தர்மலிங்கம் கலந்து கொண்டனர்.

Read More

நகரும் ரேஷன் கடை

ராஜபாளையம் : அனந்தப்ப நாயக்கர் பட்டி, அழகாபுரி, ஆப்பனூர் உள்ளிட்ட கிராமங்களில் நகரும் ரேஷன் கடையை சாத்துார் எம்.எல்.ஏ., ராஜவர்மன் தொடங்கி வைத்தார்.ஒன்றிய செயலாளர் வேல்முருகன், பொருளாளர் சுப்பையா துரை, ஜெ. பேரவை விவேகானந்தன், சீத்தாராம் சுப்பிரமணியன், இளைஞர் அணி முருக பூபதி, மீனவரணி குட்டி பங்கேற்றனர்.

Read More