கஞ்சாவை கண்டித்து தனி ஆளாக மறியல்

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் நடக்கும் கஞ்சா விற்பனையால் குடும்பமே பாதிக்கப்படுவதாக கூறி பெண் ஒருவர் தனி ஆளாக ரோடுமறியலில் ஈடுபட்டார்.

ராஜபாளையம் சுற்று பகுதிகளில் கஞ்சா, போதை பாக்குகள் விற்பனை 24 மணி நேரமும் நடக்கிறது. போதையின் பிடியில் சிக்குவோர் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். போலீசார் பெயரளவிற்கு வழக்குகள் பதிந்து கணக்கு காட்டுகிறார்களே தவிர நடவடிக்கை என்பது அறவே இல்லை.

இந்நிலையில் முடங்கியாறு ரோட்டை சேர்ந்த செல்வராணி 32,போலீசாரை கண்டித்தும், பல குடும்பங்களை சீரழிக்கும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க கோரி முடங்கியாறு சாலையின் குறுக்கே செங்கல்களை அடுக்கி தனி ஆளாக ரோட்டின் நடுவே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். தடுக்காவிட்டால் தீக் குளித்து தற்கொலை செய்வதாக தெரிவித்தார்.

வடக்கு போலீசார் செல்வராணியை அழைத்து சென்று எச்சரிக்கை செய்து அனுப்பினர்.செல்வராணி கூறியதாவது: தினக்கூலியாக உள்ள தனது கணவர் ரவிக்குமார் கஞ்சாவை பயன்படுத்தி தினமும் தன்னை துன்புறுத்தி வருகிறார்., மூத்த மகன் இதே பழக்கத்திற்கு அடிமையானதால் அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டேன். தற்போது 10 ம் வகுப்பு படிக்கும் இரண்டாவது மகனும் இதே நிலைக்கு ஆளாகிவிட்டார். இதற்கு காரணமான கஞ்சா விற்பனை குறித்து போலீசார் முதல் உயர் அதிகாரிகள் வரை புகார் தெரிவித்து விட்டேன். எந்த நடவடிக்கையும் எடுக்காது அலட்சியப்படுத்துகின்றனர்,என்றார்.

Related posts

Leave a Comment