விளையாட்டு விடுதிகளுக்கு ரூ.7.75 கோடி ஒதுக்கீடு

விருதுநகர்:கிராம இளைஞர்களின் விளையாட்டு திறன்களை மேம்படுத்தி மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானங்களின் வளாகத்தில் நவீன வசதிகளுடன் விளையாட்டு விடுதிகள் கட்டப்பட உள்ளன. இதன்படி விருதுநகர், காஞ்சிபுரத்தில் தலா ரூ.1.40 கோடி, திருவாரூரில் ரூ.1.70 கோடி, சேலத்தில் ரூ.1.63 கோடி, திருவள்ளூரில் ரூ.1.57 கோடி மதிப்பில் விரைவில் கட்டுமானப்பணி துவங்க உள்ளது.

Related posts

Leave a Comment