ஆக்கிரமிப்பை அகற்ற பா.ஜ., மனு

காரியாபட்டி: காரியாபட்டி பிச்சம்பட்டி கோயில் பாதையை முட்களை போட்டு ஒரு தரப்பினர் அடைத்தனர். ஒவ்வொரு திருவிழாவின் போதும் பாதை பிரச்னை ஏற்பட்டு பேச்சுவார்த்தை மூலம் தற்காலிக தீர்வு ஏற்படுத்தினர். இதுதொடர்பாக மற்றொரு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். பாதை உள்ளது என்பதை ஊர்ஜிதம் செய்து ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. நீண்ட நாட்களாகியும் அகற்றவில்லை . இதனிடையே நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி பா.ஜ., நிர்வாகிகள் தாசில்தார் தனக்குமாரிடம் மனு கொடுத்தனர். விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Related posts

Leave a Comment