தெய்வீக திருமகனார் “பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்” அவர்களின் 113 வது ஜெயந்தி விழா

தெய்வீக திருமகனார் “பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்” அவர்களின் 113 வது ஜெயந்தி விழா இராஜபாளையம் வட்டம் கிழவிகுளம் கிராமத்தில் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு திரு.K.K.S.S.R.இராமசந்திரன்.MLA அவர்களின் ஆணைக்கினங்க சாத்தூர் சட்டமன்றத் தொகுதி கோசுகுன்டு திரு.S.V.சீனிவாசன்.B.com அவர்கள் ரூ.10000/- நன்கொடையாக வழங்கினார். இந்த தொகை கிழவிகுளம் ஊர் நாட்டாண்மை திரு.பொ.முணியரத்தினம் அவர்களிடம் இராஜபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.ப.தங்கச்சாமி அவர்கள் தலைமையில், இராஜபாளையம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகளான திரு.ஞான்ராஜ், திரு.முருகேசன், திரு.அடைக்கலம், திரு.சரவணமுருகன், திரு.அமுதராஜ், திரு.பாலவிநாயகம் திரு.பழணிவேல்ராஜன் மற்றும் கிழவிகுளம் கிளை செயலாளர் திரு.கு.முனீஸ்வரன் ஆகியோர் வழங்கினர்…

Read More

Manickam Tagore Member of parliament

ஒரே ஒரு நாளை நம்பி 364 நாட்களும் பணியாற்றும் சிவகாசி தொழிலாளர்களை ஏமாற்றிவிடாதீர்கள் தயவு செய்து #சீனாபட்டாசுகளை வாங்காதீர்கள்.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் (தெலுங்கானா) ப. மாணிக்கம் தாகூர்M.P கோரிக்கை.

Read More

விருதுநகரில் லஞ்ச ஒழிப்பு சோதனை சிக்கினார் ஊராட்சி உதவி இயக்குனர்:கணக்கில் வராத ரூ.2.26 லட்சம் பறிமுதல்

விருதுநகர்:விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் உதவி இயக்குனரிடமிருந்து கணக்கில் வராத ரூ.2.26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. விருதுநகர் கலெக்டர் அலுவலக முதல் தளத்தில்ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு 450 ஊராட்சிகளில் நடக்கும் திட்ட பணிகளுக்கு அனுமதி தரப்படுகிறது. அதன் படி ஊராட்சிகளில் நடக்கும் பணிகளுக்கு பணியின் மதிப்பீட்டில் 7 சதவீதம் லஞ்சம் டிரைவர் மூலம் வாங்கப்படுவதாக விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று மதியம் 1:00 மணிக்கு ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை இணை ஆய்வுக்குழு அலுவலர் பொன்ராஜன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கருப்பையா, இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், விமலா சோதனையிட்டனர். உதவி இயக்குனர் விஷ்ணுபரன், அவரது டிரைவர் சரவணன் ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத ரூ.2.26 லட்சம்பறிமுதல் செய்யப்பட்டது.…

Read More

கண்காணியுங்க! லைெசன்ஸ் இல்லாது வாகனங்கள் இயக்கம்

அருப்புக்கோட்டை : அரசு வழங்கும் மாத உதவி தொகை ஐந்து மாதமாகியும் வழங்காததால் மாற்று திறனாளிகள் அவதிப்படுகின்றனர். மாவட்டத்தில் 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாற்று திறனாளிகள் உள்ளனர். அரசு மூலம் மாதாமாதம் உதவி தொகை ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 5 மாதங்களுக்கு மேலாக வழங்கவில்லை. வருவாய்துறையில் கேட்ட போது 40,70 சதவீதம் பாதிப்பு மாற்று திறனாளிகளுக்கு வருவாய்துறை (ஒஏபி) மூலம், 70 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு உள்ளவர் களுக்கு மாற்று திறனாளிகள் நலத்துறை மூலம் உதவி தொகைகள் வழங்கப்படும். நிதி ஒதுக்கீட்டிற்கு ஏற்ப 3 , 4 மாதங்கள் கழித்து மொத்தமாக வழங்கப்படும், என்றனர். கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் இவர்களுக்கு இதை முமையாக வழங்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.

Read More

கண்காணியுங்க! லைெசன்ஸ் இல்லாது வாகனங்கள் இயக்கம்

அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டத்தில் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். இது போன்றவர்களால் விபத்து அதிகம் ஏற்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .பெரும்பாலானோர் லைசென்ஸ் இன்றி இரண்டு,மூன்று ,நான்கு சக்கர வாகனங்களை இயக்குகின்றனர். வாகன விதிகளை மீறி , விதிகள் தெரியாது இருசக்கர வாகனங்களில் 3 முதல் 4 பேர்களுடன் அதிவேகமாக சென்று விபத்துக்களை சந்திக்கின்றனர். 18 வயதிற்கு கீழே உள்ளவர்கள் அதிகம் பேர் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். லைசென்ஸ் எடுக்காமலேயே பெற்றோர்கள் பலர் பிள்ளைகளுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்கி தருகின்றனர். கிராம பகுதிகளில் 18 வயதிற்குட்பட்டவர்கள், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பலர் மினிவேன், தண்ணீர் வேன், டிராக்டர்கள், இருசக்கரவாகனங்களை லைசென்ஸ் இன்றி ஓட்டுகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துக்கள், உயிர்பலியும் ஏற்படுகிறது. போக்குவரத்து ஆய்வாளர்கள் ,போலீசார் என யாரும் இதை…

Read More

நுால் வெளியீட்டு விழா

ஸ்ரீவில்லிபுத்துார் : ஆண்டாள் கோயில் மண்டபத்தில் கவிஞர் சுரா எழுதிய ஆண்டாள் அந்தாதி நுால் வெளியீட்டு விழா நடந்தது. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற ஸ் கிளை தலைவர் கோதையூர் மணியன் முதல் பிரதியை வெளியிட, சிவகாசி கல்லுாரி தமிழ்துறை தலைவர்சிவனேசன் பெற்று கொண்டார். தமிழார்வலர் சந்திரசேகரன் , நுாலாசிரியர் கவிஞர் சுரா பேசினர். தமிழார்வலர்கள் துள்ளுகுட்டி, கண்ணன் பங்கேற்றனர்.

Read More

சதுரகிரியில் இன்று முதல் அனுமதி

வத்திராயிருப்பு,:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கபடுகிறார்கள். மழை பெய்தால் மலையேறுவது நிறுத்தி வைக்கபடும் என வனத்துறை அறிவித்துள்ளது. பக்தர்கள் முககவசம் அணிந்து வர வேண்டும். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் பாதிப்புள்ளவர்களுக்கு அனுமதியில்லை. இரவில் மலையில் தங்க அனுமதி கிடையாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Read More

மாதிரி நேர்காணலுக்கு அழைப்பு

விருதுநகர் : கலெக்டர் கண்ணன் கூறியதாவது: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 969 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் மார்ச் 16ல் வெளியிடப்பட்டு உடற்தகுதி தேர்வும் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாதிரி நேர்காணல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில நவ. 7ல் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க நவ. 5க்குள் பெயர், தேர்வுக்கான பதிவு எண் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும், என்றார்.

Read More

ஆன்லைன் மாரத்தான் : ஜே.சி.ஐ., ஏற்பாடு

சிவகாசி : ஜே.சி.ஐ., சிவகாசி டச்சஸ் சார்பில் தொடர்ந்து 58 மணி நேரம் ஆன்லைன் மாரத்தான் என்ற முறையில் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அக். 25 காலை 8:00 மணிக்கு துவங்கிய இந்நிகழ்ச்சி தொடர்ச்சியாக 58 மணி நேரம் நடந்து அக். 27 மாலை 6:00 மணிக்கு நிறைவு பெற்றது. இதற்கு தலைவர் ராஜகோமதி தலைமை வகித்தார். 29 பேச்சாளர்கள் வெவ்வேறு தலைப்புகளில் தலா இரண்டு மணி நேரம் பேசினர். இதயம் நிறுவனம் தலைவர் முத்து, அரிமா சங்க முன்னாள் ஆளுநர்கள் பிரகாஷ், சுதந்திரலட்சுமி, ஜே.சி.ஐ., முன்னாள் தேசிய தலைவர் ரவிசங்கர் பங்கேற்றனர். உலகின் முதன் முறையாக லைப்ஸ்கில்ஸ் தலைப்பில் நடந்த இதை எலைட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ், ஆசிய ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி , தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பதிவு செய்தது.

Read More