ஆன்லைன் மாரத்தான் : ஜே.சி.ஐ., ஏற்பாடு

சிவகாசி : ஜே.சி.ஐ., சிவகாசி டச்சஸ் சார்பில் தொடர்ந்து 58 மணி நேரம் ஆன்லைன் மாரத்தான் என்ற முறையில் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அக். 25 காலை 8:00 மணிக்கு துவங்கிய இந்நிகழ்ச்சி தொடர்ச்சியாக 58 மணி நேரம் நடந்து அக். 27 மாலை 6:00 மணிக்கு நிறைவு பெற்றது. இதற்கு தலைவர் ராஜகோமதி தலைமை வகித்தார். 29 பேச்சாளர்கள் வெவ்வேறு தலைப்புகளில் தலா இரண்டு மணி நேரம் பேசினர். இதயம் நிறுவனம் தலைவர் முத்து, அரிமா சங்க முன்னாள் ஆளுநர்கள் பிரகாஷ், சுதந்திரலட்சுமி, ஜே.சி.ஐ., முன்னாள் தேசிய தலைவர் ரவிசங்கர் பங்கேற்றனர்.

உலகின் முதன் முறையாக லைப்ஸ்கில்ஸ் தலைப்பில் நடந்த இதை எலைட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ், ஆசிய ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி , தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பதிவு செய்தது.

Related posts

Leave a Comment