கண்காணியுங்க! லைெசன்ஸ் இல்லாது வாகனங்கள் இயக்கம்

அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டத்தில் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டுபவர்கள் அதிகரித்து வருகின்றனர்.

இது போன்றவர்களால் விபத்து அதிகம் ஏற்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .பெரும்பாலானோர் லைசென்ஸ் இன்றி இரண்டு,மூன்று ,நான்கு சக்கர வாகனங்களை இயக்குகின்றனர். வாகன விதிகளை மீறி , விதிகள் தெரியாது இருசக்கர வாகனங்களில் 3 முதல் 4 பேர்களுடன் அதிவேகமாக சென்று விபத்துக்களை சந்திக்கின்றனர். 18 வயதிற்கு கீழே உள்ளவர்கள் அதிகம் பேர் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். லைசென்ஸ் எடுக்காமலேயே பெற்றோர்கள் பலர் பிள்ளைகளுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்கி தருகின்றனர்.

கிராம பகுதிகளில் 18 வயதிற்குட்பட்டவர்கள், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பலர் மினிவேன், தண்ணீர் வேன், டிராக்டர்கள், இருசக்கரவாகனங்களை லைசென்ஸ் இன்றி ஓட்டுகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துக்கள், உயிர்பலியும் ஏற்படுகிறது. போக்குவரத்து ஆய்வாளர்கள் ,போலீசார் என யாரும் இதை கண்டு கொள்வதில்லை. டிராபிக் போலீசாரோ பாராமுகத்தில் உள்ளனர். லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்குபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து லைசென்ஸ் உடனடியாக எடுக்க வலியுறுத்த வேண்டும்.

அவ்வவ்போது பிடிக்கும் போது அபராதம் விதிப்பது இதற்கு தீர்வு ஆகாது. 18 வயது முடிந்தபின் லைசென்ஸ் எடுத்தபின்தான் வாகனங்களை இயக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்த வேண்டும்…….கண்டிப்பு காட்டுங்கஇருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் 18 வயது முடிந்த பின்பு லைசென்ஸ் எடுத்த பிறகு தான் ஓட்ட வேண்டும். இதற்கு பெற்றோர்களும் ஒத்துழைப்பதோடு கண்டிப்பும் காட்ட வேண்டும். தங்களது அவசர வேலைக்கு வாகனத்தை கொடுத்து அனுப்புவதால் லைசென்ஸ் எடுப்பதில் மெத்தனம் ஏற்படுகிறது. போக்குவரத்து அலுவலர்கள், டிராபிக் போலீசார்தான் இதன் மீது கண்டிப்பு காட்ட வேண்டும்.ராஜசேகர், சமூக ஆர்வலர் ,அருப்புக்கோட்டை…………….

Related posts

Leave a Comment