வத்திராயிருப்பில் 126 மி.மீ., மழை

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு மற்றும் ஸ்ரீவி., சுற்றுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. இதில் வீடு ஒன்று மண்ணில் புதைந்தது.

மழையால் வத்திராயிருப்பில் 126.8 மி.மீட்டரும், பிளவக்கல் அணையில் 29 மி.மீ, கோவிலாறு அணையில் 32.4 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. இதனால் வத்திராயிருப்பு, கூமாபட்டி, கான்சாபுரம், தாணிப்பாறை பகுதிகளில் குளிர்ந்த சூழல் நிலவியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து, அணை மற்றும் கண்மாய்கள் நிரம்ப வேண்டுமென்பது அப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.

ஸ்ரீவில்லிபுத்துாரில் 44 மி.மீட்டர் மழை பெய்திருந்தநிலையில், கீழப்பட்டி பிள்ளையார் கோயில் தெருவில் கருப்பசாமி என்பவர் புதிதாக கட்டியிருந்த வீட்டின் தரைதளம் 3 அடிக்கு மண்ணுக்குள் இறங்கியது. இதையடுத்து சுற்றுப்பகுதியில் குடியிருப்போர் வேறு இடத்திற்கு மாற்றபட்டு, மின்சப்ளையும் துண்டிக்கபட்டது.

Related posts

Leave a Comment