விருதுநகரில் லஞ்ச ஒழிப்பு சோதனை சிக்கினார் ஊராட்சி உதவி இயக்குனர்:கணக்கில் வராத ரூ.2.26 லட்சம் பறிமுதல்

விருதுநகர்:விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் உதவி இயக்குனரிடமிருந்து கணக்கில் வராத ரூ.2.26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர் கலெக்டர் அலுவலக முதல் தளத்தில்ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு 450 ஊராட்சிகளில் நடக்கும் திட்ட பணிகளுக்கு அனுமதி தரப்படுகிறது. அதன் படி ஊராட்சிகளில் நடக்கும் பணிகளுக்கு பணியின் மதிப்பீட்டில் 7 சதவீதம் லஞ்சம் டிரைவர் மூலம் வாங்கப்படுவதாக விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி நேற்று மதியம் 1:00 மணிக்கு ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை இணை ஆய்வுக்குழு அலுவலர் பொன்ராஜன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கருப்பையா, இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், விமலா சோதனையிட்டனர். உதவி இயக்குனர் விஷ்ணுபரன், அவரது டிரைவர் சரவணன் ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத ரூ.2.26 லட்சம்பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

Related posts

Leave a Comment