வார்னர் அப்பவே கரெக்டா சொன்னாரு.. நாங்க தான் புரிஞ்சுக்கலை.. தோல்விக்கு பின் புலம்பிய கோலி!

ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது பெங்களூர் அணி. அந்த அணியின் தோல்விக்கு பின் பேசிய கேப்டன் விராட் கோலி புலம்பித் தள்ளினார். டாஸ் நிகழ்வின் போது வார்னர் சொன்னது போலவே இரண்டாம் பாதியில் நடந்ததாக அவர் கூறினார். வெற்றி இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து சேஸிங் செய்த ஹைதராபாத் அணி 14.1 ஓவரில் வெற்றி இலக்கை எளிதாக எட்டியது. இந்த வெற்றி அந்த அணியின் பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை அதிகரித்தது. டேவிட் வார்னர் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அப்போது இரண்டாம் பாதியில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் பந்து வீசுவது கடினம் என அவர்…

Read More

ஏனென்றால் உன் பிறந்தநாள்… ஜாம்பவானுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விவிஎஸ் லஷ்மனின் 46வது பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் தற்போதைய ஐபிஎல்லின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வழிகாட்டியுமான விவிஎஸ் லஷ்மன் பிறந்ததினத்தையொட்டி பிசிசிஐ, ஐசிசி உள்ளிட்டவை வாழ்த்து தெரிவித்துள்ளன. கடந்த 2012ல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள விவிஎஸ் லஷ்மன், 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8781 ரன்களையும் 86 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2338 ரன்களையும் குவித்துள்ளார். எஸ்ஆர்எச் அணியின் வழிகாட்டி கடந்த 2012ல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான் விவிஎஸ் லஷ்மன், தன்னுடைய கேரியரில் 134 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 86 ஒருநாள் போட்டிகளில் விளையாடி முறையே 8781 மற்றும் 2338 ரன்களை குவித்துள்ளார். ஓய்விற்கு பின்பு தற்போது ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் வழிகாட்டியாக…

Read More

Happy Tamilnadu Day!

தமிழ்நாடு நாள் தமிழ்நாடு மாநிலமாக உருவான நாள் நவம்பர் 1. ஆகையால் தமிழ்நாடு நாள் என தமிழக அரசால் கடந்த ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. இன்று தமிழகம் முழுவதும் உணர்வு எழுச்சியுடன் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான இன்றைய நாள் தமிழ்நாடு நாளாக தமிழகம் முழுவதும் உணர்வு எழுச்சியுடன் கொண்டாப்பட்டு வருகிறது. நாடு விடுதலை அடைந்த போது பல்வேறு மாகாணங்கள் நடைமுறையில் இருந்தன. பின்னர் மாகாணங்களை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தமிழ்நாடு மாநிலம் உதயம் இதனடிப்படையில் மாகாணங்கள் மொழிவாரியாக மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. சென்னை மாகாண பகுதிகளும் மொழிகள் அடிப்படையில் பிரிக்கப்பட்டன. தமிழ் பேசும் பகுதிகள் அனைத்தும் மெட்ராஸ் ஸ்டேட்- மெட்ராஸ் மாநிலமாக 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ல் உதயமானது. பின்னர் மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றினார் பேரறிஞர் அண்ணா. #TamilnaduDay #Tamilnadu #HappyTamilnaduDay

Read More