வார்னர் அப்பவே கரெக்டா சொன்னாரு.. நாங்க தான் புரிஞ்சுக்கலை.. தோல்விக்கு பின் புலம்பிய கோலி!

ஷார்ஜா : 2020 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது பெங்களூர் அணி. அந்த அணியின் தோல்விக்கு பின் பேசிய கேப்டன் விராட் கோலி புலம்பித் தள்ளினார். டாஸ் நிகழ்வின் போது வார்னர் சொன்னது போலவே இரண்டாம் பாதியில் நடந்ததாக அவர் கூறினார்.

வெற்றி

வெற்றி இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து சேஸிங் செய்த ஹைதராபாத் அணி 14.1 ஓவரில் வெற்றி இலக்கை எளிதாக எட்டியது. இந்த வெற்றி அந்த அணியின் பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை அதிகரித்தது.

டேவிட் வார்னர் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அப்போது இரண்டாம் பாதியில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் பந்து வீசுவது கடினம் என அவர் குறிப்பிட்டார். பெங்களூர் அணி இரண்டாம் பாதியில் பந்து வீசும் போது அதே போல நடந்தது.

தைரியமாக ஆடவில்லை இந்த நிலையில், தோல்விக்கு பின் பேசிய பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பெங்களூர் அணி வீரர்கள் பேட்டிங்கில் தைரியமாக ஆடவில்லை என்றும், ஹைதராபாத் அணி பிட்ச்சை சரியாக பயன்படுத்தியது என்றும் கூறினார்.

பனிப்பொழிவு மேலும், தாங்கள் பனிப்பொழிவு இருக்காது என நினைத்ததாகவும், கடந்த சில போட்டிகளிலும், இந்த போட்டியிலும் துபாயில் பனிப்பொழிவு இருந்ததாக கூறினார் கோலி. தங்கள் அணியால் அதை கணிக்க முடியவில்லை என்றும், ஹைதராபாத் அணி அதை சரியாக கணித்தது. பந்தை பிடிக்கவே முடியவில்லை என்றார் கோலி.

Related posts

Leave a Comment