ஏனென்றால் உன் பிறந்தநாள்… ஜாம்பவானுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விவிஎஸ் லஷ்மனின் 46வது பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் தற்போதைய ஐபிஎல்லின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வழிகாட்டியுமான விவிஎஸ் லஷ்மன் பிறந்ததினத்தையொட்டி பிசிசிஐ, ஐசிசி உள்ளிட்டவை வாழ்த்து தெரிவித்துள்ளன. கடந்த 2012ல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள விவிஎஸ் லஷ்மன், 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8781 ரன்களையும் 86 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2338 ரன்களையும் குவித்துள்ளார்.

எஸ்ஆர்எச் அணியின் வழிகாட்டி

எஸ்ஆர்எச் அணியின் வழிகாட்டி கடந்த 2012ல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான் விவிஎஸ் லஷ்மன், தன்னுடைய கேரியரில் 134 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 86 ஒருநாள் போட்டிகளில் விளையாடி முறையே 8781 மற்றும் 2338 ரன்களை குவித்துள்ளார். ஓய்விற்கு பின்பு தற்போது ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் வழிகாட்டியாக உள்ளார்.

லஷ்மனுக்கு குவியும் வாழ்த்து இந்நிலையில் விவிஎஸ் லஷ்மனின் 46வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தன்னுடைய ஆட்டத்தின்மூலம் கிரிக்கெட்டிற்கு அழகையும் சிறப்பையும் சேர்த்தவர் லஷ்மன் என்று தெரிவித்துள்ள பிசிசிஐ மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அவுட்டாகாமல் அவர் அடித்த 176 ரன் குவிப்பின் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

எஸ்ஆர்எச் வாழ்த்து இதேபோல, லஷ்மன் சிறப்பான வழிகாட்டி என்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. இதனிடையே முன்னாள் இந்திய துவக்க வீரர் கவுதம் கம்பீரும் டிவிட்டர் பக்கத்தில் லஷ்மனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளில் அவர் அளித்துள்ள சிறப்பான நினைவுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார் கம்பீர்.

Related posts

Leave a Comment