எல்லாம் மேல இருக்கறவன் பார்த்துப்பான்… எங்ககையில எதுவும் இல்லை… மார்கன் நம்பிக்கை

துபாய்: நேற்றைய போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி கொண்டுள்ளது. இயைடுத்து ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் 14 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்துள்ளது கேகேஆர் அணி. இந்நிலையில் தங்களது கையில் எதுவும் இல்லை என்றும் பிளே-ஆப் சுற்றிற்கு முன்னேறுவது கடவுள் கையில்தான் உள்ளது என்றும் கேகேஆர் அணியின் கேப்டன் இயான் மார்கன் தெரிவித்துள்ளார். தகர்ந்த பஞ்சாப் கனவு பிளே ஆப் சுற்றிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி சென்றுள்ளது. நேற்றைய சிஎஸ்கே -பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியில் சிஎஸ்கே வெற்றி மூலம் பஞ்சாப் அணியின் பிளே-ஆப் கனவு தகர்ந்துள்ளது. இதனிடையே, கேகேஆர் மற்றும் ஆர்ஆர் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் கேகேஆர் வெற்றி பெற்றுள்ளது. 4வது இடத்தில் கேகேஆர் இதையடுத்து 14 புள்ளிகளுடன் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில்…

Read More

“அக்கா”.. கனிமொழியும், சைக்கிளும்.. தூத்துக்குடியே தூக்கி வைத்து கொண்டாடும் தொகுதி எம்பி.. சூப்பர்

தூத்துக்குடி: “அக்கா” என்று பாசத்துடன் அழைத்து எந்த கோரிக்கையை வைத்தாலும் சரி, அவர்களின் திறமையை அறிந்து தேடிப்பிடித்து உதவி செய்து விடுகிறார் தூத்துக்குடி எம்பி கனிமொழி.. அப்படித்தான் இப்போதும் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பாக நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கனிமொழி எம்பி கலந்து கொண்டார்.. அப்போது கீழமுடிமண் என்ற கிராமத்தை சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவிக்கு 5 லட்சம் மதிப்புள்ள ரேஸ் சைக்கிளை வழங்கினார். ஏற்கனவே, ஒட்டப்பிடாரம் அருகே நடந்த கிராமசபை கூட்டத்தின்போது கனிமொழி எம்பியை சந்தித்த ஸ்ரீமதி, “அக்கா.. நான் சைக்கிள் பந்தயங்களில் மாவட்ட, ஸ்டேட் லெவலில் நிறைய பரிசு வாங்கியிருக்கேன்.. எனக்கு சர்வதேச சைக்கிள் போட்டிகளில் கலந்துக்க ரொம்ப ஆசை.. ஆனால், அதுக்கு நியூ மாடல் ரேஸ் சைக்கிள் தேவைப்படுகிறது” என்று கனிமொழி எம்பியிடம் கோரிக்கை…

Read More

அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு வேளாண்துறை ஒதுக்கீடு

சென்னை: உயர்கல்விதுறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு வேளாண்துறை ஒதுக்கீடு செய்து கவர்னர் ஒப்புதல் அளித்தார். அமைச்சர் துரைக்கண்ணு மறைவை தொடர்ந்து அவரிடம் இருந்த வேளாண்துறையை உயர்கல்விதுறை அமைச்சருக்கு அளிக்க முதல்வர் பழனிசாமி கவர்னருக்கு பரிந்துரை செய்திருந்தார்.இந்நிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு வேளாண் துறையை ஒதுக்கீடு செய்தார். கே.பி.அன்பழகன், இனி உயர்கல்வி மற்றும் வேளாண்துறைக்கு பொறுப்பு வகிப்பார்.

Read More

சுகாதார நிலையத்திற்கு வருவதில்லை டாக்டர்; குமுறும் குப்பாம்பட்டி மக்கள்

செயல்படுத்துவதே இல்லைதுணை சுகாதார நிலையத்தை போராடி பெற்றும் முறையாக செயல்படுத்துவதே இல்லை. கர்ப்பிணிகளுக்கு சோதிப்பதற்கு கூட விருதுநகர் அரசு மருத்துவமனைக்குதான் செல்லும் நிலை உள்ளது. பெயரளவுக்கு செயல்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜெயவீரபாண்டியன், டிரைவர்தாமதிக்கும் அதிகாரிகள்கவுசிகா நீர்வழித்தடத்தில் தடுப்பணை கட்டி தர வேண்டும். செயல்படாத சுகாதார வளாகத்தை செயல்படுத்த வேண்டும். ஊராட்சி நிர்வாகம் முடிந்த வரையில் சிறப்பாக தான் செயல்படுகிறது. ஆனால் மாவட்ட அதிகாரிகள் தான் நிதி ஒதுக்காமல் தாமதித்து வருகின்றனர். மஞ்சுநாதன், தனியார் ஊழியர்தேவை ரேஷன் கடைஎங்கள் பகுதிக்கு நிரந்தர ரேஷன் கடை வேண்டும். நுாலகமும் செயல்படவில்லை. அதையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துணை சுகாதார நிலையம் செயல்பாடாததால் 20 கி.மீ., பயணம் செய்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளது. மாவட்ட நிர்வாகம் தான் உதவி புரிய வேண்டும்.சுமேகா, குடும்பத்தலைவி

Read More

லஞ்ச ஒழிப்பு பிரசாரம்

அருப்புக்கோட்டை: லஞ்ச ஒழிப்புவாரத்தை முன்னிட்டு திருச்சுழி மெயின் பஜார், மதுரை ரோடு உள்ளிட்ட பகுதியில் தீயணைப்பு துறை அலுவலர்கள் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். லஞ்ச ஒழிப்பு பற்றிய உறுதிமொழி எடுத்தனர்.

Read More

கண்மாய் கரைகளில் ஆலமரம் வளர்ப்பு

விருதுநகர்: மாவட்டத்தில் கண்மாய்கள், குளங்கள், நீர் நிலைகளின் கரைகளில் ஆலமரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேளாண்மைத்துறை கிராம மக்கள், விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறது. இதன்படி பி.குமாரலிங்கம் கிராம மக்கள் கண்மாய் கரைகளில் ஆலமரங்களை வளர்த்து நீர் வள பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருகின்றனர். ஆல மரத்தின் இலை பெரியதாகவும், நீள் வடிவத்திலும், தோல் போன்ற அமைப்புடன் பளபளப்பான பச்சை நிறத்தில் இருக்கும். மருத்துவ குணம் கொண்ட ஆலமரத்தின் தனித்துவமான பண்பு அதன் விழுதுகள் தான். நிலத்திற்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும் ஆலம் விழுதுகள் மிகவும் பெரியதாக வளர்ந்து நிலத்தை தொட்டு தானும் ஒரு தனி மரமாக கம்பீரமாக காட்சியளிக்கும். விருதுநகரில் 250 ஆண்டுகளை கடந்த ஆல மரங்கள் ஏராளமாக உள்ளன.நீர் வள மேலாண்மை, நிலத்தடி நீராதாரம் காக்க ஆலமரம் இயற்கையாகவே பல்வேறு அற்புத பணிகளை செய்கிறது. எனவே கண்மாய்கள், குளங்கள்,…

Read More

சிவகாசியில் பட்டாசு ஆர்டர் கொடுக்க குவிந்த வியாபாரிகள்

சிவகாசி : விடுமுறை நாளான நேற்று வட மாவட்டங்களிலிருந்து பட்டாசு வியாபாரிகள் ஆர்டர் கொடுப்பதற்காக அதிகளவில் குவிந்ததால் சிவகாசி களைகட்டியது. பட்டாசு வியாபாரிகள், உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்துார், உள்ளிட்ட பகுதிகளில் 1070 பட்டாசு தொழிற்சாலைகள், 1500க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. கொரோனா தொற்றால் 50 நாட்கள் பட்டாசு தயாரிப்பு பணி நடக்கவில்லை. இதனால் பட்டாசு உற்பத்தி 30 சதவீதம் குறைந்துள்ளது. 2019ல் தீபாவளிக்குஒன்றரை மாதங்களுக்கு முன்பே சிவகாசியில் வெளி மாநில, மாவட்ட பட்டாசு வியாபாரிகள், மக்கள் பட்டாசுகளை வாங்கி சென்றனர். இதனால் சிவகாசி பரபரப்பாக இருந்தது. ஓட்டல்கள், டீக்கடைகளில் கூட்டம் அலைமோதுயது. இந்த முறை தீபாவளிக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் தற்பொழுது தான் பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது. நேற்று விடுமுறை என்பதால் பாட்டாசுகள் வாங்க வெளி மாவட்ட வியாபாரிகள்,…

Read More

குத்து விளக்கு பூஜை

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே மெட்டுக்குண்டு உச்சினி மகா காளியம்மன் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு குத்து விளக்கு பூஜை நடந்தது. உலக நன்மைக்காகவும், மழை பெய்யவும், மக்கள் நோயின்றி வாழவும் பெண்கள் குத்து விளக்கு பூஜை செய்தனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு அபிேஷகம், ஆராதனைகள் நடந்தன.

Read More

விருதுநகரில் வேல் யாத்திரை; நயினார் நாகேந்திரன் தகவல்

விருதுநகர் : ”விருதுநகரில் வேல் யாத்திரை டிச.,2ல் நடக்கிறது,” என பா.ஜ., மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். விருதுநகரில் வேல் யாத்திரை குறித்த ஆலோசனை கூட்டம் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடந்தது.அவர் பேசியதாவது: விருதுநகரில் டிச.,2ல் நடக்கும் வெற்றிவேல், வீரவேல் யாத்திரையில் மாநில தலைவர் முருகன், டிச., 6ல் திருச்செந்துாரில் நடக்கும் யாத்திரையில் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்கின்றனர். இந்த யாத்திரை முடிந்த பிறகு பா.ஜ., ஆட்சி மலரும். வேல் யாத்திரை வெற்றி பெறுவது குறித்து தகவல் தொழில்நுட்ப அணி இணைய தலம் வழியாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். என்றார்.நிர்வாகிகள் கஜேந்திரன், பொன்ராஜன், கரந்தமலை, ராஜ்குமார், வெற்றிவேல், சசிராமன், பார்த்தசாரதி, ராமஜெயம், சந்திரன், ஈஸ்ரவன் பங்கேற்றனர்.பா.ஜ., மகளிரணி தலைவி காளீஸ்வரி தலைமையில் தி.மு.க.,வை சேர்ந்த 55 பெண்கள் பா.ஜ.,வில் இணைந்தனர்.

Read More

மாயமாகும் நிலையில் அர்ஜூனாநதி; ஆக்கிரமிப்பு ,மணல் கொள்ளை ஜோர்

விருதுநகர் : விருதுநகரின் முக்கிய நீராதாரமான அர்ஜூனாநதியில் நடக்கும் மணல் கொள்ளை, ஆக்கிரமிப்புகளால் இந்நதி காணாமல் போகும் அவலம் ஏற்பட்டு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் கான்சாபுரத்தில் துவங்கி கூமாபட்டி, வத்திராயிருப்பு கண்மாய்களை நிரப்பும் இந்நதி சுந்தரபாண்டியம், எரிச்சநத்தம், நத்தம்பட்டி, எம்.புதுப்பட்டி, ஆனைக்குட்டம், ஆர்.ஆர்.நகர், கோல்வார்பட்டி நீர்நிலைகளை நிரப்பி இருக்கன்குடி அணையில் முடிகிறது. இதன் உபரி நீர் வைப்பாற்றில் சென்றடைகிறது. நதியானது பாராமரிப்பின்றி நீரோட்ட பாதையில் கருவேல மரங்கள் அதிகம் ஆக்கிரமித்துள்ளன. இேதாடு வடமலாபுரத்தில் காரிசேரி, சோரம்பட்டி ரயில்வே பாலம் பகுதிகளில் அதிகாலையில் மணல் திருட்டு ஜோராக நடக்கிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் அர்ஜூனாநதி சிதிலமடைந்து வருகிறது. இப்படியே போனால் நதி இருந்ததற்கான அமையாளம் காணாமல் போகும் நிலை உள்ளது. இந்நதியை குடிமராமத்து பணி மூலம் மீட்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read More