“அக்கா”.. கனிமொழியும், சைக்கிளும்.. தூத்துக்குடியே தூக்கி வைத்து கொண்டாடும் தொகுதி எம்பி.. சூப்பர்

தூத்துக்குடி: “அக்கா” என்று பாசத்துடன் அழைத்து எந்த கோரிக்கையை வைத்தாலும் சரி, அவர்களின் திறமையை அறிந்து தேடிப்பிடித்து உதவி செய்து விடுகிறார் தூத்துக்குடி எம்பி கனிமொழி.. அப்படித்தான் இப்போதும் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பாக நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கனிமொழி எம்பி கலந்து கொண்டார்.. அப்போது கீழமுடிமண் என்ற கிராமத்தை சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவிக்கு 5 லட்சம் மதிப்புள்ள ரேஸ் சைக்கிளை வழங்கினார். ஏற்கனவே, ஒட்டப்பிடாரம் அருகே நடந்த கிராமசபை கூட்டத்தின்போது கனிமொழி எம்பியை சந்தித்த ஸ்ரீமதி, “அக்கா.. நான் சைக்கிள் பந்தயங்களில் மாவட்ட, ஸ்டேட் லெவலில் நிறைய பரிசு வாங்கியிருக்கேன்.. எனக்கு சர்வதேச சைக்கிள் போட்டிகளில் கலந்துக்க ரொம்ப ஆசை.. ஆனால், அதுக்கு நியூ மாடல் ரேஸ் சைக்கிள் தேவைப்படுகிறது” என்று கனிமொழி எம்பியிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

 கனிமொழி

கனிமொழி இதை இவ்வளவு நாள் நினைவில் வைத்திருந்த கனிமொழி, திரும்பவும் தூத்துக்குடி சென்றபோது, ஸ்ரீமதியை வரவழைத்தார்.. 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சைக்கிளை ஸ்ரீமதிக்கு வழங்கி, தன்னுடைய வாழ்த்தையும் சொன்னார்.. இதனால் திக்குமுக்காடி போய்விட்டார் ஸ்ரீமதி.. இந்த சைக்கிள் மூலம் இன்னும் நிறைய பிராக்டிஸ் செய்வேன்.. என்று கனிமொழியிடம் சொல்லி தன்னுடைய நன்றியையும் உரித்தாக்கி கொண்டார்.

பயிற்சி கடந்த வருஷம் நவம்பர் மாதம் ராஜஸ்தானில் நடந்த 17 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய சைக்கிள் போட்டியில் கலந்துகொண்டு 4வது இடத்தை பிடித்தவர் ஸ்ரீமதி… இதையடுத்து 17வயதுக்குட்பட்ட தேசிய சைக்கிள் போட்டிகளில் பங்குபெறுவதற்காக ஸ்ரீமதியை இந்திய விளையாட்டு ஆணையம் தேர்ந்தெடுத்தது.. இதற்காக டெல்லி விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வந்தார் ஸ்ரீமதி.

தூத்துக்குடி அதுமட்டுமல்ல, டெல்லி வரும்போதெல்லாம் பார்த்து கொள்வதாகவும், எந்த கவலையும் இல்லாமல் பயிற்சியில் ஈடுபட்டு., தமிழகத்துக்கும், தூத்துக்குடிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் மாணவியை பாசத்தோடு வாழ்த்தி கேட்டுக் கொண்டார் கனிமொழி. ஒரு கிராம சபை கூட்டத்தில் தன்னை சந்தித்து உதவி கேட்ட ஒரு கிராமத்து பெண்ணின் திறமையை ஊக்கப்படுத்தி, அவரை டெல்லி வரை சென்று பயிற்சி பெறும் அளவுக்கு உயர்த்திய கனிமொழி எம்பியின் மனசை கண்டு தொகுதி மக்கள் புளகாங்கிதம் அடைந்துள்ளனர்..

அகிலா இப்படித்தான் கடந்த எம்பி தேர்தலின்போது கிராம சபை கூட்டங்களில் கனிமொழியின் செயல்பாடுகள் முக்கிய இடத்தை பிடித்தது.. அப்போது கக்கரம்பட்டி என்ற கிராமத்தில் அகிலா என்ற மாணவி, “அக்கா… எங்க ஊருல லைப்ரரி இருக்கு, ஆனா படிக்க அவ்வளவா புத்தகங்கள் இல்லை” என்று சொல்லவும், உடனே சென்னை திரும்பிய கனிமொழி, தன் ஆபீசில் இருந்த புத்தகங்கள் எல்லாத்தையும் அகிலா கேட்ட லைப்ரரிக்கு அனுப்ப சொல்லி விட்டார்.

2 நாளில் 300 புத்தகங்கள் லைப்ரரிக்கு வந்து சேர்ந்ததாம். இந்த புத்தகங்கள் எல்லாம் நினைவு பரிசாக கனிமொழிக்காக அளிக்கப்பட்ட புத்தகங்கள் என்று சொல்லப்பட்டது.. இப்படி, சின்ன விஷயமே என்றாலும் உடனுக்குடன் கனிமொழி நிறைவேற்றி கொடுத்து, தொகுதி பெண்கள், மாணவர்களின் மனதில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார் கனிமொழி!

Related posts

Leave a Comment