விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகரில் #தமிழகம்மீட்போம் சட்ட மன்ற தேர்தல் சிறப்பு பொது கூட்டம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகரில் #தமிழகம்மீட்போம் சட்ட மன்ற தேர்தல் சிறப்பு பொது கூட்டம் 03-11-2020 காணொலி காட்சி மூலம் கழக தலைவர் மாண்புமிகு திரு M.K.ஸ்டாலின் அவர்கள் சிறப்புரை விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு திரு. KKSSRR MLA அவர்கள் வழிகாட்டுதலின் ,சாத்தூர் சட்டமன்றத் தொகுதி கோசு குண்டு திரு .S V சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டார் …

Read More

கோட்டையில் தி.மு.க. ஆட்சி என சபதம் எடுப்போம்

சென்னை: கோட்டையில் தி.மு.க. ஆட்சி என்பதை புதுக்கோட்டை கூட்டத்தில் சபதம் எடுப்போம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசினார்.புதுக்கோட்டையில் நேற்று நடந்த தமிழகம் மீட்போம் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் பொருளாதார வளம் நாசமாகிவிட்டது. வேலைவாய்ப்புகள் இல்லை. மாநில உரிமைகள் பறி போய்விட்டன. வேளாண்மையை சிதைத்து விட்டனர். நாசக்கார திட்டங்களை எடுத்து வந்து, தமிழகத்தின் தலையில் கட்டுகின்றனர். எதிர்பார்க்கும் திட்டங்களை கொடுப்பதே இல்லை. அதற்கு ஒரு உதாரணம் எய்ம்ஸ் மருத்துவமனை. இதுவரைக்கும் வரவில்லை. மீண்டும் தமிழக மக்களை ஏமாற்றுவதற்கு எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஒரு குழு போட்டுள்ளனர். அதில் எம்.பி.க்கள் இடம் பெறவில்லை.மாறாக தரக்குறைவான செயல்களில் ஈடுபட்ட டாக்டர் ஒருவர் அக்குழுவில் இடம் பெற்றுள்ளார். அதை தட்டி கேட்க தெம்பு,தைரியம், அ.திமு.க..அரசுக்கு இல்லை. இந்த கூட்டத்தை வீழ்த்தும் கடமை தி.மு.க.,…

Read More

200 தொகுதிகளில் போட்டியிட அ.தி.மு.க., திட்டம்

தமிழகத்தில், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கு இடம் கொடுக்காத வகையில், 200 தொகுதிகளில், அ.தி.மு.க., போட்டியிட திட்டமிட்டுள்ளது. ஆட்சியில் பங்கு கேட்கும், பா.ஜ., – பா.ம.க.,வை கழற்றி விடவும் ஆலோசித்து வருகிறது. மீதியுள்ள இடங்களை, தே.மு.தி.க., – த.மா.கா., மற்றும் சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கவும், வீழ்ந்த ஓட்டு சதவீதத்தை உயர்த்தவும், அதிரடி ஆட்டம் ஆட, அ.தி.மு.க., ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு, 44 சதவீத ஓட்டுக்களைப் பெற்றது; 37 தொகுதிகளை கைப்பற்றியது. 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், 41 சதவீதம் ஓட்டுக்களை, அ.தி.மு.க., பெற்று, மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது.கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., – பா.ஜ., – பா.ம.க., – தே.மு.தி.க., போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும், தேனி தொகுதியில் மட்டுமே, அ.தி.மு.க.,…

Read More

தொடர்ந்து விலை உயரும் பாமாயில், வத்தல்

விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில், கடலை எண்ணெய், வத்தல் விலை அதிகரித்து காணப்படுகிறது. மார்க்கெட்டில் கடலை எண்ணெய்(15 கிலோ டின்) ரூ.50 அதிகரித்து ரூ.2400, நல்லெண்ணெய் ரூ.4300, சன்பிளவர் எண்ணெய் ரூ.1950, பாமாயில் ரூ.30 அதிகரித்து ரூ.1520, 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.100 குறைந்து ரூ.4500, 100 கிலோ சர்க்கரை ரூ.20 அதிகரித்து ரூ.3600, மைதா 90 கிலோ பை ரூ.3500, 55 கிலோ பொரிகடலை ரூ.100 அதிகரித்து ரூ.4300, 100 கிலோ துவரம் பருப்பு புதுசு நாடு ரூ.300 குறைந்து ரூ.10,000, 100 கிலோ நயம் புதுசு லயன் ரூ.300 குறைந்து ரூ.10,600, நாட்டு உளுந்து 100 கிலோ ரூ.8200, உளுந்து லயன் ரூ.8200க்கு விற்கப்படுகிறது. மசூர் பருப்பு பருவட்டு ரூ.7700, உருட்டு உளுந்து நாடு வகை ரூ.200 அதிகரித்து ரூ.11,700, பர்மா வகை ரூ.9,500,…

Read More

கார் கண்ணாடியை உடைத்து 18 பவுன் கொள்ளை

விருதுநகர்:-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கோவை வங்கி மேலாளர் கார் கண்ணாடியை உடைத்து 18 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. கோவை பீளமேட்டை சேர்ந்தவர் விஜயன் 41. தனியார் வங்கி மேலாளரான இவர் குடும்பத்துடன் திருநெல்வேலியில் நடந்த திருமணத்தில் கலந்து கொண்டு காரில் கோவைக்கு திரும்பி கொண்டிருந்தார்.மதிய உணவு சாப்பிட விருதுநகர் நான்கு வழிச்சாலை சர்வீஸ்ரோட்டில் பொதுப்பணித்துறை அலுவலகம்அருகே காரை நிறுத்தி சென்றார். கார் கண்ணாடியை உடைத்தவர்கள் பையில் இருந்த 18 பவுன் தங்க நகை, பட்டுப்புடவைகளை கொள்ளையடித்தனர்.இதுபோல் அருகே நிறுத்தப்பட்டிருந்த தேவக்கோட்டை சிவசங்கர் காரிலிருந்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப் திருடுப்போனது. ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

Read More

தலைமுறைகள் கண்ட தெப்பம்: குலதெய்வமாக வணங்கும் மக்கள்

விருதுநகர்: முன்னோர் வடிவமைத்த கிராமங்களில் தெப்பக்குளம் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். மழை பெய்யும் போது சொட்டு நீரை கூட வீணாக்காமல் தெப்பத்தை வந்தடையும் வகையில் வரத்து கால்வாய்களை அமைத்திருந்தனர். தெப்பத்தை சுற்றிலும் கல் கோட்டை அமைத்து மழை நீர் சேமித்து குடிநீர், விவசாயம், பிற தேவைகளுக்கும் ஆண்டு முழுவதும் பயன்படுத்தி வந்தனர்.காலப்போக்கில் தெப்பத்தை பராமரிக்காமல் விட்டதால் கிராமங்களை வறட்சியின் பிடியில் இருந்து காப்பாற்றி வந்த பல தெப்பங்கள் உருக்குலைந்து காணாமல் போய் விட்டது. தெப்பக்குளங்கள் கழிவு நீர் சேமிக்கும் மையமாகவும், குப்பை கொட்டும் தொட்டியாகவும் மாற்றப்பட்டு விட்டன. மழை நீரை சேமிக்க வழியில்லாமல் போனதால் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.எனினும் விரல் விட்டு எண்ணும் அளவு சில கிராமங்களில் தெப்பத்தை பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர். அந்த வரிசையில் விருதுநகர் அருகே மலைப்பட்டி கிராமத்தின் மையத்தில்…

Read More