கோட்டையில் தி.மு.க. ஆட்சி என சபதம் எடுப்போம்

சென்னை: கோட்டையில் தி.மு.க. ஆட்சி என்பதை புதுக்கோட்டை கூட்டத்தில் சபதம் எடுப்போம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசினார்.
புதுக்கோட்டையில் நேற்று நடந்த தமிழகம் மீட்போம் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் பொருளாதார வளம் நாசமாகிவிட்டது. வேலைவாய்ப்புகள் இல்லை. மாநில உரிமைகள் பறி போய்விட்டன. வேளாண்மையை சிதைத்து விட்டனர். நாசக்கார திட்டங்களை எடுத்து வந்து, தமிழகத்தின் தலையில் கட்டுகின்றனர். எதிர்பார்க்கும் திட்டங்களை கொடுப்பதே இல்லை. அதற்கு ஒரு உதாரணம் எய்ம்ஸ் மருத்துவமனை. இதுவரைக்கும் வரவில்லை. மீண்டும் தமிழக மக்களை ஏமாற்றுவதற்கு எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஒரு குழு போட்டுள்ளனர். அதில் எம்.பி.க்கள் இடம் பெறவில்லை.
மாறாக தரக்குறைவான செயல்களில் ஈடுபட்ட டாக்டர் ஒருவர் அக்குழுவில் இடம் பெற்றுள்ளார். அதை தட்டி கேட்க தெம்பு,தைரியம், அ.திமு.க..அரசுக்கு இல்லை. இந்த கூட்டத்தை வீழ்த்தும் கடமை தி.மு.க., தொண்டர்களுக்கு உண்டு. தேர்தல் என்ற உலைக்களத்தில் நாம் படைக்கலன்களாக மாற வேண்டும்.கோட்டையில் தி.மு.க. ஆட்சி என்பதை புதுக்கோட்டை கூட்டத்தில் சபதம் எடுப்போம். புதிய கோட்டையாக மாற்றிக் காட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

காய்கறிக்கு அடிப்படை விலை நிர்ணயிக்க சட்டம்


‘கேரள மாநில அரசு கொண்டு வந்துள்ள, காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயிக்கும் விவசாயிகள் பாதுகாப்பு சட்டத்தை போல, தமிழகத்திலும் முதல்வர், சட்டம் கொண்டு வர வேண்டும்’ என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்திஉள்ளார்.

அவரது அறிக்கை:எதிர்ப்புகளுக்கு இடையே, மத்திய அரசு நிறைவேற்றி இருக்கும், மூன்று வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் வாழ்வில், காரிருள் சூழ வைத்துள்ளன. இச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட உடன், பருப்பு விலை, 25 முதல், 60 ரூபாய் வரை உயர்ந்தது. சமையல் எண்ணெய் விலையும் உயர்ந்துஉள்ளது. வெங்காய விலையோ, கிலோ, 100 முதல், 160 ரூபாய் வரை உயர்ந்து, ஏழை, எளிய, நடுத்தர மக்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது. உருளைக் கிழங்கு விலை ஏறுமுகமாகி விட்டது. வெங்காயம், சமையல் எண்ணெய், பருப்பு, உருளைக் கிழங்கு, காய்கறிகள் எல்லாம், விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு, பதுக்கி வைக்கப்பட்டு உள்ளன.இதன் வாயிலாக, தீபாவளி பண்டிகை நேரத்தில், இடைத்தரகர்களால் விலை ஏற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளலாம் என, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.இது, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் சுதந்திரம் மற்றும் பொதுமக்கள் நியாயமான விலைக்கு, அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் சுதந்திரத்தை பறித்திருக்கிறது.ஊழல், ‘டெண்டர்’களில் மட்டும் கவனம் செலுத்துவதை கைவிட்டு,- காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தில் இருந்து, மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.கேரள அரசு போல, காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்யும் சட்டம் கொண்டு வர வேண்டும். அ.தி.மு.க., அரசு, உடனே சட்டம் கொண்டு வரவில்லை என்றால், -தி.மு.க., ஆட்சி அமைந்ததும், அச்சட்டம் கொண்டு வரப்படும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறிஉள்ளார்.

Related posts

Leave a Comment