“அவருக்கு” முன்பு மாதிரி கிரேஸ் இல்லையாம்.. டெல்லிக்கு பறந்த ரிப்போர்ட்.. அதிரடிக்கு தயாராகும் பாஜக!

சென்னை: ரஜினி வருகை பெருத்த சந்தேகத்தை எழுப்பி வரும் நிலையில், 2 முக்கிய விஷயங்கள் தமிழக அரசியல் களத்தை திணறடித்து வருகின்றன.. யூகங்களா? புரளிகளா? உண்மையா? என்று தெரியாத நிலையில், இரு செய்திகளுமே திராவிட கட்சிகளுக்கு கலக்கத்தை மறைமுகமாக தந்து வருகின்றன. ரஜினி தன்னுடைய நிலைப்பாட்டை கடந்த வாரமே சொல்லிவிட்டார்.. அப்போதும் சஸ்பென்ஸ் வைத்துதான் சொன்னாரே தவிர, வழக்கம்போல, உறுதியாக எதையும் சொல்லவில்லை… அறிவிக்கவும் இல்லை இந்த நிலையில், பாஜக தரப்பினர் ரஜினியை சந்தித்து பேசினர்.. முதல்நாள் தமிழருவி மணியன் சென்றுவிட்டு வந்தார்… பிறகு குருமூர்த்தி சென்றுவந்தார்.. என்ன பேசினார்கள் என்று உறுதியாக தெரியவில்லை.. ஆனால் திமுகவுக்கு எதிராக வாய்ஸ் தரும்படி ரஜினியிடம் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு ரஜினி மவுனம் காத்ததாகவும் செய்திகள் கசிந்தன. இப்போது இன்னொன்றும் சொல்லப்படுகிறது.. தமிழகத்தில் ரஜினியின் தற்போதைய கிரேஸ் பற்றி அமித்ஷாவுக்கு…

Read More

அணியோட போராட்ட குணம்தான் வெற்றிக்கு காரணம்… சன்ரைசர்ஸ் கேப்டன் மனம்திறந்த பாராட்டு

ஷார்ஜா : நேற்றைய ஐபிஎல்லின் இறுதி லீக் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி கொண்டுள்ளது. போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் விரித்திமான் சாஹா அடித்த 85 மற்றும் 58 ரன்கள் அதிரடி வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. இதனிடையே, இந்த வெற்றிக்கு அணியின் போராட்ட குணமே காரணம் என்று சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சன்ரைசர்ஸ் அணி வெற்றி நேற்றைய ஐபிஎல்லின் இறுதி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய நிலையில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு நான்காவது அணியாக தகுதி பெற்றுள்ளது. ஆர்சிபியுடன் மோதல் இதையடுத்து வரும் வெள்ளிக்கிழமை ஆர்சிபி அணியுடன் எலிமினேஷன் சுற்றில் சன்ரைசர்ஸ் மோதவுள்ளது. கடந்த 2016ம்…

Read More

போலீஸ்காரரிடம் லஞ்சம்: நகராட்சி ஊழியர் கைது

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் போலீஸ்காரர் ஜாபர் சாதிக்கிடம், நேற்று ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிவகாசிநகராட்சி வருவாய் உதவியாளர் கார்த்திகேயனை 43,லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். சிவகாசி சீதக்ஹதைக்கா தெரு ஜாபர் சாதிக் 36, திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணிபுரிகிறார்.சிவகாசியில் புதிதாக கட்டும்வீட்டுக்கு சொத்துவரி செலுத்த சிவகாசிநகராட்சி உதவியாளர் கார்த்திகேயனை, அணுகினார். அவர் ரூ.30 ஆயிரம்லஞ்சம் கேட்டார்.ரூ.10 ஆயிரம் தருவதாக கூறிய ஜாபர் சாதிக், விருதுநகர் லஞ்ச ஒழிப்புதுறையிடம் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,கருப்பையா, இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், விமலா அறிவுரைப்படி நேற்று மதியம் 12:45 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் கார்த்திகேயனிடம், ஜாபர் சாதிக் பணம் கொடுத்தார். கார்த்திகேயனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Read More

அன்று கம்பீரம் இன்று சிதிலம்: பயனற்று போகும் கல் மண்டபங்கள்

விருதுநகர் : விருதுநகர் அருகே அழகியநல்லுார் கிராமத்தில் தென்னாட்டை ஆண்ட ராணி மங்கம்மாள் எழுப்பிய கல் மண்டபங்கள் பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகிறது. மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் மனைவி ராணி மங்கம்மாள். கணவர் இறந்ததும் மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் இளம் வயதாக இருந்ததால் உடன் கட்டை ஏறாமல் மகனுக்கு துணையாக காப்பாட்சியாளராக இருந்து தென்னாட்டை 1689 முதல் 1704 வரை 18 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.போர் வீரர்கள், மாட்டு வண்டிகளில் தானியங்களை ஏற்றி கொண்டு இரவில் நெடுந்துாரம் பயணம் செய்வோர் ஓய்வெடுக்க ராணி மங்கம்மாள் கல் மண்டபங்களை எழுப்பினார். இவை கலைநுட்பத்துடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டன. கோடையிலும் குளுமையாக இருக்கும்.இவைகளை தொல்லியல்துறை பராமரிக்க தவறியதால் பெரும்பாலான கல் மண்டபங்கள் சிதிலமடைந்து பயன்படுத்த இயலாதபடி முற்றிலும் சேதமடைந்து உள்ளன. இதை சீரமைத்து பாதுகாக்கலாம்.

Read More

பராமரிப்பில்லா வீடுகள்; எரியாத விளக்குகள்

வீட்டிற்கு தேவை கழிப்பறைபொதுசுகாதாரவளாகம் சிதைந்து கிடக்கிறது. கடைசியாக கட்டபட்ட வீடுகளின் கழிப்பறையும் பயன்படுத்தமுடியாத நிலை உள்ளது. இதனால் திறந்தவெளியை பயன்படுத்தவேண்டியுள்ளது. வீட்டுக்கு வீடு கழிப்பறை வசதி செய்து தரவேண்டும். ஆறுமுகம், குடியிருப்பாளர்வேண்டும் கூடுதல் குடிநீர் இணைப்புகுடிநீருக்காக ஒரே தொட்டி மட்டுமே உள்ளது. இதை நம்பித்தான் 26 வீடுகளை சேர்ந்தவர்கள் குடிநீர் பிடித்து வருகின்றனர். மழை நேரங்களில் குடிநீர் தட்டுபாடு நிலவுகிறது. கூடுதல் குடிநீர் இணைப்புகள் செய்துதர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.கோபால், குடியிருப்பாளர்வீடுகளை சீரமையுங்கவீடுகளின் மேற்கூரைகள் சிதைந்து காணப்படுகிறது. பக்க வாட்டு சுவர்களில் கீறல்கள் விழுந்து இடியும் நிலை உள்ளது. போதிய பொருளாதாரவசதி இல்லாததால் வீடுகளை பராமரிக்கமுடியவில்லை. அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வீடுகளை சீரமைக்கவேண்டும்.பாண்டியராஜ், குடியிருப்பாளர்

Read More

பயிரை தாக்குவது புல்வெளி வெட்டுக்கிளிகளே

விருதுநகர் : விருதுநகரில் நடந்த வெட்டுக்கிளி தாக்குதல் சாதாரண புல்வெளிகளில் காணப்படும் வெட்டுக்கிளிகள் தான் என கோவிலான்குளம் வேளாண் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி சீனிவாசன் தெரிவித்தார். விருதுநகர் மருளூத்தில் பயிரிடப்பட்ட தீவன சோளத்தில் மஞ்சள், பச்சை என வெட்டுக்கிளி தாக்குதல் இருந்தது. ‘தினமலர்’ செய்தி எதிரொலியாக இணை இயக்குனர் உத்தண்டராமன், துணை இயக்குனர் சங்கர் எஸ்.நாராயணன், தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் ராஜேந்திரன் உடன் கோவிலான்குளம் வேளாண் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி சீனிவாசன் ஆய்வு நடத்தினார்.சீனிவாசன் கூறியதாவது: தீவன சோளம் பயிரிடப்பட்டுள்ள வயலில் மட்டுமே வெட்டுக்கிளிகள் தாக்குதல் கண்டயறியப்பட்டுள்ளது. இவை பொதுவான புல்வெளிகளில் காணப்படும் வெட்டுக்கிளிகள் தான். பாலைவன வெட்டுகிளிகளிலிருந்து வேறுபட்டவை என கண்டறியப்பட்டுஉள்ளது. இதை கட்டுப்படுத்த அசாடிராக்டின் 10 ஆயிரம் பிபிஎம் என்ற தாவர பூச்சி கொல்லி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் 2 மி.லி., வீதம்…

Read More

ராஜஸ்தானில் பட்டாசுக்கான தடையை நீக்குங்க : டான்பாமா தலைவர் வேண்டுகோள்

சிவகாசி:ராஜஸ்தானில் பட்டாசு வெடிக்க, விற்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்க (டான்பாமா) தலைவர் சோனி கணேசன் வேண்டு கோள் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது: தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பட்டாசு தொழிலுக்கு பலவகையில் நெருக்கடி வந்து கொண்டே இருக்கிறது. கொரோனா பாதிப்பை காரணம் காட்டி ராஜஸ்தான் அரசு பட்டாசு விற்பனை செய்ய, வெடிக்க தடை விதித்துள்ளது. கொரோனா பாதிப்பிற்கும் பட்டாசு வெடிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தடை செய்யப்பட்டுள்ள கெமிக்கல்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பட்டாசு விற்பனையை மட்டுமே ராஜஸ்தான் அரசு தடை செய்ய வேண்டும். அரசு விதிகளின்படி உற்பத்தி செய்த பட்டாசுக்கு அனுமதி வேண்டும். தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும் பட்டாசுகளை…

Read More

தொழிற் மையம் வேண்டுகோள்

சிவகாசி : இந்திய தொழிற்சங்க மையம் மாவட்ட செயலாளர் தேவா அறிக்கை:மத்திய அரசின் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதலில்தான் பட்டாசு தயாரிக்கப்படுகிறது. பட்டாசு விற்க, வெடிக்க உத்தரவு போட்ட ராஜஸ்தான் அரசு அதை திரும்ப பெற வேண்டும். 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,என கேட்டுள்ளார்.

Read More

கிராமங்களில் மரக்கன்றுகள்: ஊரக வளர்ச்சி முகமை ஏற்பாடு

விருதுநகர் : மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க ஊராட்சி வளர்ச்சி முகமை ஏற்பாடு செய்து வருகிறது. மாவட்டத்தில் ஊராட்சிகளுக்கு உட்பட்ட குக்கிராமங்களில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி முகமை நிதியின் மூலம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகிறது. இத்திட்டம் பல்வேறு கிராமங்களில் நடைமுறைக்கு வராத நிலையில் பல கிராமங்களில் நடப்பட்ட மரக்கன்றுகள் துளிர்த்து வருகிறது.விருதுநகர் அருகே கோட்டநத்தம் – ராமகுடும்பம்பட்டி இடையே சாலையின் இருபுறமும் 1 கி.மீ., தொலைவிற்கு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அவ்வப்போது பெய்யும் மழையால் துளிர்விட்டுஉள்ளது. தொடர்ந்து பராமரிப்பு மேற்கொண்டால் மரக்கன்றுகளை காப்பாற்றலாம் .

Read More