போலீஸ்காரரிடம் லஞ்சம்: நகராட்சி ஊழியர் கைது

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் போலீஸ்காரர் ஜாபர் சாதிக்கிடம், நேற்று ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிவகாசிநகராட்சி வருவாய் உதவியாளர் கார்த்திகேயனை 43,லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி சீதக்ஹதைக்கா தெரு ஜாபர் சாதிக் 36, திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணிபுரிகிறார்.சிவகாசியில் புதிதாக கட்டும்வீட்டுக்கு சொத்துவரி செலுத்த சிவகாசிநகராட்சி உதவியாளர் கார்த்திகேயனை, அணுகினார். அவர் ரூ.30 ஆயிரம்லஞ்சம் கேட்டார்.ரூ.10 ஆயிரம் தருவதாக கூறிய ஜாபர் சாதிக், விருதுநகர் லஞ்ச ஒழிப்புதுறையிடம் புகார் தெரிவித்தார்.

லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,கருப்பையா, இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், விமலா அறிவுரைப்படி நேற்று மதியம் 12:45 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் கார்த்திகேயனிடம், ஜாபர் சாதிக் பணம் கொடுத்தார். கார்த்திகேயனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Related posts

Leave a Comment