அணியோட போராட்ட குணம்தான் வெற்றிக்கு காரணம்… சன்ரைசர்ஸ் கேப்டன் மனம்திறந்த பாராட்டு

ஷார்ஜா : நேற்றைய ஐபிஎல்லின் இறுதி லீக் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி கொண்டுள்ளது. போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் விரித்திமான் சாஹா அடித்த 85 மற்றும் 58 ரன்கள் அதிரடி வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. இதனிடையே, இந்த வெற்றிக்கு அணியின் போராட்ட குணமே காரணம் என்று சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சன்ரைசர்ஸ் அணி வெற்றி

சன்ரைசர்ஸ் அணி வெற்றி நேற்றைய ஐபிஎல்லின் இறுதி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய நிலையில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு நான்காவது அணியாக தகுதி பெற்றுள்ளது.

ஆர்சிபியுடன் மோதல் இதையடுத்து வரும் வெள்ளிக்கிழமை ஆர்சிபி அணியுடன் எலிமினேஷன் சுற்றில் சன்ரைசர்ஸ் மோதவுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு இறுதிப்போட்டியில் இதே அணியுடன் மோதி கோப்பையை சன்ரைசர்ஸ் அணி வெற்றி கொண்டது. அதையடுத்து தொடர்ந்து 5வது ஆண்டாக பிளே-ஆப் சுற்றிற்கு முன்னேறியுள்ளது.

போராட்ட குணத்துடன் வீரர்கள் இந்நிலையில், நதீம் உள்ளிட்ட பௌலர்களின் திறமையால் இந்த வெற்றி சாத்தியமானதாக சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பாராட்டு தெரிவித்துள்ளார். தங்களது அணிவீரர்கள் எப்போதும் போராட்ட குணத்துடனேயே போட்டிகளை அணுகுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சாத்தியமான வெற்றி சில வீரர்கள் காயங்களால் அணியிலிருந்து விலகிய நிலையிலும் உற்சாகத்துடன் விளையாடி மற்ற வீரர்கள் இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கேன் வில்லியம்சனுக்கு பதிலாக விளையாடிவரும் ஜானி பேர்ஸ்டோ மிகவும் சிறப்பாக விளையாடி வருவதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

ஆவலுடன் காத்திருப்பு வரும் வெள்ளிக்கிழமை எதிர்கொள்ளவுள்ள ஆர்சிபிக்கு எதிரான எலிமினேஷன் சுற்று போட்டியை விளையாட மிகவும் ஆவலுடன் காத்திருப்பதாகவும் அது வாழ்வா சாவா போட்டியாகவே சன்ரைசர்ஸ் அணிக்கு இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். விராட் கோலியால் வழிநடத்தப்படும் ஆர்சிபி மிகவும் சிறப்பான அணி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment