“அவருக்கு” முன்பு மாதிரி கிரேஸ் இல்லையாம்.. டெல்லிக்கு பறந்த ரிப்போர்ட்.. அதிரடிக்கு தயாராகும் பாஜக!

சென்னை: ரஜினி வருகை பெருத்த சந்தேகத்தை எழுப்பி வரும் நிலையில், 2 முக்கிய விஷயங்கள் தமிழக அரசியல் களத்தை திணறடித்து வருகின்றன.. யூகங்களா? புரளிகளா? உண்மையா? என்று தெரியாத நிலையில், இரு செய்திகளுமே திராவிட கட்சிகளுக்கு கலக்கத்தை மறைமுகமாக தந்து வருகின்றன.

ரஜினி தன்னுடைய நிலைப்பாட்டை கடந்த வாரமே சொல்லிவிட்டார்.. அப்போதும் சஸ்பென்ஸ் வைத்துதான் சொன்னாரே தவிர, வழக்கம்போல, உறுதியாக எதையும் சொல்லவில்லை… அறிவிக்கவும் இல்லை

இந்த நிலையில், பாஜக தரப்பினர் ரஜினியை சந்தித்து பேசினர்.. முதல்நாள் தமிழருவி மணியன் சென்றுவிட்டு வந்தார்… பிறகு குருமூர்த்தி சென்றுவந்தார்.. என்ன பேசினார்கள் என்று உறுதியாக தெரியவில்லை.. ஆனால் திமுகவுக்கு எதிராக வாய்ஸ் தரும்படி ரஜினியிடம் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு ரஜினி மவுனம் காத்ததாகவும் செய்திகள் கசிந்தன.

இப்போது இன்னொன்றும் சொல்லப்படுகிறது.. தமிழகத்தில் ரஜினியின் தற்போதைய கிரேஸ் பற்றி அமித்ஷாவுக்கு ரிப்போர்ட் ஒன்று போனதாம்.. அதில், 1996-ல் ரஜினிக்கு இருந்த கிரேஸ், இப்போதுள்ள கிரேஸ், அரசியல் களத்தில் ரஜினி ஏற்படுத்திய தாக்கம் குறித்தெல்லாம் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

அதனடிப்படையில், ரஜினிக்கு மக்கள் ஆதரவு எதிர்பார்த்த அளவு இல்லை என்று கூறப்பட்டுள்ளது.. ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று, அரசியல் கட்சிகளும் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்றும், அரசியலுக்கு வர சொல்லி அழைத்து கொண்டிருப்பது அவரது ரசிகர்கள் மட்டுமே என்றும் சொல்லப்பட்டதாம்.. அதுவும் ஏராளமான ரசிகர்கள் இல்லை.. ஓரளவுக்குதான் போயஸ் கார்டன் முன்புகூடி முழக்கமிட்டு வந்ததையும் குறிப்பிட்டுள்ளனர்.

ஒருவேளை தொற்று பாதிப்பு காரணமாக வெளியே வரமுடியவில்லை என்றாலும், சோஷியல் மீடியாவிலும் அந்த அளவுக்கு ஆதரவு இல்லை என்பதும் கூறப்பட்டதாம்.. ஆனால் சினிமா உலகில் ரஜினிக்கு இ ருக்கும் கிரேஸ் அப்படியேதான் உள்ளதாகவும், அரசியலில் அது செல்லுபடியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதெல்லாம் உண்மையா, இல்லையா என்று தெரியவில்லை.

அதேசமயம், இன்னொரு செய்தி ரஜினிக்கு ஆதரவாக கிளம்பி உள்ளது. ரஜினிகாந்த் ஆரம்பிக்க போகும் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று இப்போதே பெண்கள் திரண்டு வாக்கு சேகரிக்க சென்றுவிட்ட ஆச்சரியமும் நடந்துள்ளது.. நாகப்பட்டினம் மகளிர் சுய உதவிக்குழுவினர்தான் இப்படி வீடு வீடாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

Related posts

Leave a Comment