சாத்துார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து

சாத்துார் : சாத்துார் அருகே இரவார்பட்டி அனில் பயர் ஒர்க்சில் கருந்திரி வெட்டிய போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் காயமடைந்தார். இதை தொடர்ந்து ஆலை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிவகாசி சேர்ந்தவர் பாலாஜி பவன், ராஜேஷ்.இவர்களுக்கு சொந்தமான நாக்பூர் லைசென்ஸ்பட்டாசு தொழிற்சாலை இரவார்பட்டியில் உள்ளது. அங்கு அறைகளில் சரவெடி தயாரிக்கப்படுகிறது. நேற்று காலை 9:30 மணிக்கு பட்டாசு தயாரிக்கும் அறைக்கு வெளியே காய்ந்து கொண்டிருந்த பட்டாசுக்கான கருந்திரியை இரவார்பட்டி சேர்ந்த ஊர் தேவன் 42, சிறு துண்டுகளாக வெட்டினார். அப்போது வெடி விபத்து ஏற்பட்டது. ஊர் தேவன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். இதனிடையே இங்கு பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறை முதன்மை அலுவலர் சுந்தரேசன் ஆலையை ஆய்வு செய்தார். விதிமீறலால் விபத்து ஏற்பட்டது தெரிய வந்ததை தொடர்ந்து…

Read More

9500 பேருக்கு பென்ஷன் ; அமைச்சர் பெருமிதம்

சிவகாசி : சிவகாசி தொகுதியில் 9500 பேருக்கு முதியோர் பென்ஷன் வாங்கி தந்துள்ளதாக அமைச்சர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். தொகுதியில் கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வரும் அவர் ஆலமரத்துபட்டியில் குறைகளை கேட்டறிந்து மக்களிடம் மனு வாங்கினார். அங்கு அமைச்சர் பேசியதாவது: சிவகாசி தொகுதியில் 9500 பேருக்கு முதியோர் பென்ஷன் ,10 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வாங்கி கொடுத்துள்ளேன். ஆலமரத்துப்பட்டியில் புதிய ரேஷன் கடை, மயானத்திற்கு ரோடு அமைத்துக் கொடுக்கப்படும் ,என்றார். சந்திரபிரபா எம்.எல்.ஏ., மாவட்ட திட்ட அலுவலர் ஜெயக்குமார், ஒன்றிய பொறியாளர் நாராயணசாமி, ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, பலராம், சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சுபாஷினி, மருத்துவ அணி செயலாளர் விஜய்ஆனந்த், ஊராட்சி தலைவர் ஜோதிலட்சுமி கலந்து கொண்டனர்

Read More

இடம்பெயர்கிறது வணிகவரி அலுவலகம்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்ட வணிகவரி அலுவலகம் ராஜபாளையத்துக்கு மாற்றுவதால் ஸ்ரீவில்லிபுத்துார் மட்டுமின்றி வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியம், கிருஷ்ணன்கோயில், மல்லி உட்பட பல்வேறு பகுதி வியாபாரிகள், தொழில் முனைவோர்கள்பாதிக்கின்றனர் . ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே 2 மாடிகளுடன் கட்டபட்ட கட்டடத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் பழனிச்சாமி காணொலி மூலம் திறந்து வைத்தார். இதில்ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்துார் வணிகவரி அலுவலகங்கள் செயல்படவுள்ளது. இதற்காக ஸ்ரீவில்லிபுத்துார் அலுவலக ஆவணங்கள் இடமாற்றம் செய்யபட்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் முழு அளவில் இடம் பெயர்கிறது.இதனால் ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் வத்திராயிருப்பு தாலுாகா பகுதி வியாபாரிகள், தொழிலதிபர்கள் வீண் அலைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. எம்.எல்.ஏ., கவனத்திற்கு: ஸ்ரீவில்லிபுத்துாரில் கிருஷ்ணன்கோயில் தெருவிலுள்ள பழைய வேளாண்மைத்துறை அலுவலகம், நகராட்சி அலுவலகம் அருகில் பழைய நீதிமன்ற…

Read More

மழையால் ஆறுகளில் நீர்வரத்து

ராஜபாளையம் : ராஜபாளையம் சுற்று பகுதியில் இடி மின்னலுடன் பெய்த கன மழையால் ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டது. நேற்று முன் தினம் இரவு 11:00 மணிக்கு மேல் சாரலுடன் தொடங்கிய மழை சிறிது நேரத்தில் இடி மின்னலுடன் கொட்டியது. அணைத்தலை ஆறு, முடங்கியாறுகளில் நீர் வரத்து காணப்பட்டது. ராஜபாளையம் ஆறாவது நீர்த்தேக்கம் 15 அடியை எட்டியது.

Read More

பாழாகும் நுாற்றாண்டு பூங்கா

விருதுநகர் : விருதுநகர் கல்லுாரி ரோட்டில் உள்ள நுாற்றாண்டு பழமையான வி.என்.பி.ஆர். பூங்காவை பராமரிக்க நகராட்சி நிர்வாகம் தவறியதால் பாழாகி வருகிறது. இப்பூங்கா 2014- -15 நிதியாண்டில் ரூ.ஒரு கோடி மதிப்பில் புனர மைக்கப்பட்டது.சிறுவர் பூங்கா, குழந்தை களுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடை பயிற்சிக்கு தனி இடம், நர்சரி கார்டன், சுகாதார வளாகம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இப்பூங்கா நிறுவப்பட்டது. இது நகர மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. பூங்கா பராமரிப்பை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்கிறது.இதற்கான நிதியும் ஆண்டு தோறும் ஒதுக்கப்பட்டு வருகிறது. எனினும் நகராட்சி நிர்வாகம் பராமரிக்காது தொடர்ந்து மெத்தமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா ஊரடங்கால் ஏழு மாதமாக பூங்கா மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுக்கு பின் நவ.,10 முதல் பொழுது போக்கு பூங்காக்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. பராமரிப்பின்றி பாழாகி வரும் வி.என்.பி.ஆர். பூங்காவை…

Read More